பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 177

கற்பிக்கும் பொழுதும், வருணனைப் பகுதியைக் கற்பிக்கும் பொழுதும், வரலாற்றுப் பகுதியினேக் கற்பிக்கும் பொழுதும் இம்முறை பெரும்பாலும் மேற்கொள்ளப்பெறும் ; அது போழ்து இம்முறை கதை சொல்லும் பாணியில் கையாளப் பெறும். இவ்வாறு செய்தால்தான் மானுக்கரின் கவனத்தை ஈர்க்க முடியும் ; அவர்களின் கற்பனையையும் தூண்டிவிட முடியும். பெரும்பாலும் மேடையில் பேசுவோர் இம்முறை. யினை மேற்கொண்டு கூட்டத்தைக் கலையவிடாது தாம் உணர்த்தவேண்டியவற்றைத் திறமையுடன் உணர்த்தித் தம் கருத்தை நிறை வேற்றிக் கொள்வதைக் காணலாம்.

ஹெர்பார்ட்டின் இரண்டாவது படியில் விளக்கம் தருதல் நன்கு பயன்படும். புதிய பாடத்தைக் கற்பித்தலில்தான் விரித்துரைக்கும் வாய்ப்புக்கள் போதரும். இந்நிலை வரும்பொழுது ஆசிரியர் சொல்லவேண்டியவற்றை நிரல் பட அமைத்துக்கொண்டு. பகுக்கவேண்டிய இடங்களில் பகுத்தும், தொகுக்கவேண்டிய இடங்களில் தொகுத்தும் தெளிவாகக் கூறவேண்டும். மாணுக்கரின் வயது, அறிவு நிலை, மொழியறிவு, அவர்கள் இருக்கும் சூழ்நிலை ஆகிய. வற்றை மனத்திற்கொண்டு விளக்கம் தருதல் நடைபெறவேண்டும். விளக்கம் தரும்பொழுது பாட நோக்கத்தை மாணுக்கர் நன்கறியச் செய்யவேண்டும். பாடத்தை நேராகக் கற்பிக்கவேண்டுமேயன்றி சுற்றிவளைத்து மயக்கவுணர்வை உண்டாக்கக் கூடாது. எளிய இனிய நடை, தேவையான அளவு மெள்ளப்போதல், அடிக்கடி பாடப்பகுதிகளைத் திரும்பக்கூறல் ஆகியவை விளக்கம் தருதலின் சிறந்த கூறுகளாகும். எந்தப் பாடத்திலும் தேவைக்கு அதிகமான செய்திகளைத் திரட்டி மாணுக்கர் மனத்தில் திணிக்க முயலக்கூடாது. பொருள்களே விளக்கும்பொழுது கரும்பலகையில் குறிப்புக்கள் எழுதுதல், சுருக்கம் தருதல், விளக்கப் படங்களால் விளக்கல் போன்ற முறைகளைக் கையாண்டால் விளக்கம் தருதலால் உணர்த்தப்பெறும் பொருள் நல்ல விளக்க மடையும். மேல்வகுப். புக்களில் பெரும்பாலும் இலக்கியம், வரலாறு, வருணனை

த-18