பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தமிழ் பயிற்றும் முறை

மகிழ்வதில்லையா ? செய்தித்தாள்களில் அடிக்கடி வெளியாகும் கேலிப் படங்களின் (Cartoons) ஆற்றலே நாம் உணரத்தான் செய்கின்ருேம். தாய்மொழி பயிற்றலில் இத்தகைய படங்கள் உரையாடல்களில் பயிற்சிதரவும், கதைகளே விளக்கவும், படிப்பு கற்பிக்கவும், சொல்லகராதியைப் பெருக்கவும், கட்டுரைகள் எழுதவும், ர-ற, ல-ழ-ள, ந-ண-ன உச்சரிப்பு வேறுபாடுகளே விளக்கவும் துணை செய்கின்றன. மின்னட்டைகளும், பட அட்டைகளும் புது முறைப்படி கற்பிப்பதில் பெரிதும் பயன்படுகின்றன. ஓவியச் சிறப்பு வாய்ந்த இரவிவர்மா படங்கள், செருமானிய நாட்டிலிருந்து வரும் வண்ணப்படங்கள் ஆகியவை புராணக் கதைகளே விளக்கவும் தெய்வ பக்தியை ஊட்டவும் துணைசெய்கின்றன. செய்தித்தாள்கள் சிறப்பிதழ்கள் போன்றவற்றில் வெளிவரும் படங்களைக் கத்தரித்துப் படத்தொகுப்பொட்டியில் (Picture album) சேகரித்து வைத்துக் கொண்டால் தேவையான பொழுது மொழி கற்பிப்பதில் அவற்றை நன்கு பயன்படுத்தலாம்.

ஏதோ ஒரு வகையில் காட்டப்பெறும் படங்களில்ை கற்பிக்கப்பெறும் பொருள் நன்கு விளக்கமடைகின்றது என்று சொல்லலாம் : படத்துணையின்றி வாய்மொழியாக மட்டிலும் கற்பித்தல் மனச்சலிப்பை உண்டாக்குவதை அனுபவத்தில் காணலாம்.

(4) வரிவடிவங்கள், தேசப்படங்கள், விளக்கப் படங்கள் முதலியவை : இவற்றைக் கொண்டு பொருளே விளக்குவது சிரமம் : குழந்தைகளும் அறிந்துகொள்வது சிரமம் ; சிறு பிள்ளைகளுக்கு அவை அதிகம் பயன்படா. மேல் வகுப்பு மாளுக்கர்களுக்குக் கற்பிக்கும்பொழுதுதான் அவற்றைப் பயன் படுத்தவேண்டும். பாடங் கற்பிக்கும்பொழுது கரும் பலகையில் வண்ணச் சுண்ணும்புக் காம்புகளைக் கொண்டு வரையப்பெறும் வரிவடிவங்கள் மிகவும் மனத்தைக் கவரக்கூடியவை என்பதை அனுபவத்தில் ஆசிரியர்கள் அறிவர்.