பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 1 99

நாட்டுப் புறங்களில் வாழும் குழந்தைகளின் சொல்வளம் வேருெரு விதமாகவும் இருக்கலாம். அன்றியும், சென்ற தலைமுறைக் குழந்தைகளின் சொல்வளத்தை விட இத் தலைமுறைக் குழந்தைகளின் சொல்வளம் அதிகம் என் பதை அனுபவத்தில் ஆசிரியர்கள் அறிவர். எனவே, ஆசிரியர்கள் தம்மிடம் வரும் குழந்தைகளின் நிலையையும், திறனையும் அறிந்து வாய்மொழிப் பயிற்சிகளே அளிக்க வேண்டும்.

முதலிலேயே நல்ல உச்சரிப்பும் தெளிவான பேச்சும் கைவரப்பெற்ருல் பின்னரும் அவை தொடர்ந்து வரும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளின் ஒலி உறுப்புக்கள் இளகி இறுகாமலிருப்பதால், நல்ல உச்சரிப்பு, திருத்தமான பேச்சு ஆகியவற்றை வாய்மொழிப் பயிற்சியால் உண்டாக் கலாம். இளமையில் தக்க வாய்மொழிப் பயிற்சிகளுக்கு வாய்ப்பு இராவிட்டால் குழந்தைகளிடம் தவருன உச்சரிப்பு, தெளிவற்ற பேச்சு முதலிய பிழைகள் ஏற்பட்டுவிடும். வயதான பிறகு ஒலி உறுப்புக்கள் இறுகிப்போன நிலையில் அப் பிழைகளேத் திருத்துவது அருமை ; முடியாது என்றும் கூறலாம். இளமைப் பருவமே நல்ல பேச்சுப் பழக்கங்கள் ஏற்படுவதற்குரிய காலமாகும். நல்ல உச்சரிப்பைப் போலவே சில நல்ல தமிழ்ச் சொற்ருெடர் அமைப்புகளைப் பேச்சுக்களில் வழங்கப் பழகிக்கொள்வது மிகவும் நன்று. இதையும் தக்க வாய்மொழிப் பயிற்சிகளால்தான் எய்து விக்க இயலும்.

தமிழ் மொழியில் பேச்சு வழக்கில் பல கொடுந்தமிழ்ச் சொற்கள் உள்ளன ; திருத்தமற்ற தமிழ்ச் சொற்களே க் கொடுந்தமிழ்ச் சொற்கள் என்று குறிப்பிடுவர் இலக்கண நூலார். தென்பாண்டி நாட்டார் ஒருவகைச் சோற்றைச் சொன்றிச் சோறு ’ என்பர் ; பைத்தியக்காரனேக் * கோட்டிக்காரன் என்பர். கொங்கு நாட்டார் பண்ணைத் தலைவனைப் பண்ணுடி என்பர் பாண்டி நாட்டார் ழகாரத்தை ளகாரமாக ஒளிப்பர். ஏழு என்பதை ஏளு