பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 தமிழ் பயிற்றும் முறை

தினம் தின்ற எலியைக் கொன்றுதின்ற பூனையைக் குலைத்திட்ட நாயை உதைத்திட்ட பசுவைக் கறந்திட்ட கோளுர் இவர்தான், இவர்தான்.

இந்த ஆட்டத்திற்குப் பெட்டி, எலி, பூனே, நாய், பசு, கோளுர் ஆகிய படங்கள் வேண்டும். இந்த ஆட்டத்தையே ஆசிரியர் கற்பனேக்கு ஏற்றவாறு வெவ்வேறு விதமாக தடத்திக் காட்டலாம். இதல்ை குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக ஒரு பொருளேக் குறித்துப் பேசும் பழக்கம் கைவரப்பெறும்.

இவ்வித ஆட்டங்களே நடிக்கும்பொழுது பாடல்களையும் தகுந்த அபிநயத்துடன் பாடலாம். இளஞ்சிருர்களுக்குச் சிறுநாடகங்களும் நடிப்பதற்கு ஏற்றவை. நடிப்பதில் தொடக்கத்தில் நல்ல தேர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. நாளடைவில் படிப்படியாக நல்ல தேர்ச்சியை எதிர்பார்க்கலாம். முதலில் சிறுகதைகளே- நரியும் காக்கையும் . போன்றவை-நடிப்பதன் மூலம் மாணக்கர்களுக்குப் பயிற்சி தரலாம். கீழ் வகுப்புக்களில் நடிப்பு மட்டும் முக்கியமன்று. இயற்கையான சொல்வன்மையில் நல்ல வளர்ச்சி ஏற்படுவதே முக்கியமாகும். நடிக்கும்பொழுது உணர்ச்சி ததும்ப நடிக்கும்படி பயிற்சி தர வேண்டும்.

மேல் வகுப்புக்களிலும் நடிப்பு வாய்மொழிப் பயிற்சிக்கு நல்ல வாய்ப்பினே நல்குகின்றது. இங்கு முன்-ஆயத்த மில்லா நடிப்பு, பயிற்சி பெற்றபின் நடிப்பு என இருவகையாக நடிப்பைக் கையாளலாம். இவைபற்றிய விவரங்களே * நடிப்பு முறை” என்ற தலைப்பில் பிறிதோரிடத்தில் காண்க. இளம் மாணுக்கர்கள் கதைகளே நாடகமாக தடித்தல் அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியை விளைவிக்கும். அவற்றை நடிக்கும்பொழுது அவர்களின் உணர்ச்சிகள்