பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 O தமிழ் பயிற்றும் முறை

குறை, சொற்போக்கில் காணும் குறை முதலியவற்றைக் கவனித்துக் குறிப்புக்கள் எடுக்கவேண்டும். ஆசிரியர் இவ்வாறு செய்வதை மாணுக்கர்கள் அறியக்கூடாது. எவ்விதத் திலும் மாணுக்கர்கள் பேசும்பொழுது தாம் தேறும் முறையில் கவனிக்கப்பெறுவதாக எண்ணம் கூடாது ; இதற்கு ஆசிரியர் வாய்ப்பே தரக்கூடாது. சொற்பொழிவின் இறுதியில் பிற மாணுக்கர்களைப்போலவே ஆசிரியரும் பேசப் பட்ட பொருளைக் குறித்து விளுக்கள் விடுக்கலாம். தொடக்கத்தில் ஒரு பாடவேளையில் (Period) ஒரு பொருளைக் குறித்துதான் சொற்பொழிவு நடைபெறும் ; எஞ்சும் நேரம் விளுக்கள் விடுப்பதிலேயே கழிந்துவிடும். ஆனல் பாடவேளே முடிகின்றதே என்று வினுக்கள் விடுப்பதைக் குறைத்துக் கொள்ளக்கூடாது. எனவே, சொற்பொழிவுக்குரிய பாடவேளே ஒருநாளின் இறுதிப் பாடவேளையாக அமைத்துக் கொள்ளப்பெற்ருல் சொற்பொழிவைத் தொடர்ந்து நடத்தவும் வசதியாக இருக்கும்.

இந்தப் பாடவேளையில் சொற்பொழிவுக்குப் பதிலாகப் புத்தக மதிப்புரைகளையும் (Reviews) செய்யும்படி ஏற்பாடு செய்யலாம். ஒரு மாணுக்கன் தான் படித்த ஒரு புத்தகத்தைப்பற்றி வகுப்பு மாணுக்கர்கட்கு எடுத்துக் கூறலாம். இப்பொழுது புத்தகம் பேச்சுப் பொருளாக அமைகின்றது. புத்தகத்தின் மதிப்புரை தரும் மாணுக்கன் தான் அப் புத்தகத்தை விரும்புவதற்கும் அல்லது விரும்பாததற்கும் உரிய காரணங்களே எடுத்து விளக்கவேண்டும். அப்புத்தகத்திலிருந்து சில அழகான பகுதிகளைப் படித்தும் காட்டலாம். அப் புத்தகத்தைப்பற்றி வினவப்பெறும் விளுக்களுக்கு விடையிறுக்க அவன் தயாராக இருக்கவேண்டும். புத்தகத்திற்கு மதிப்புரை தருவதை ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஆசிரியர் தொடங்கலாம். தொடக்கத்தில் புத்தகத்தில் படித்த ஒரு கதையைக் கூறுமாறு இவ்வேலையைத் தொடங்கலாம். படிப்படியாக இதன் தரத்தை உயர்த்திக் கொண்டே போகவேண்டும்.