பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 253。

குழந்தைகள் படிப்பின் இன்றியமையாமையை உணரத் தொடங்கியதும் படிப்பில் ஆர்வங்காட்டிப் படிக்கத் தொடங்கிவிடுவர். நல்ல சூழ்நிலையுள்ள பள்ளிகளில் இதனே எளிதில் எய்துவிக்கலாம். நல்ல சூழ்நிலையில் வாழும் குறைமதியுள்ள குழந்தைகள் பல்வேறுவகைத் தூண்டுதல்களால் விரைவாகவோ மெதுவாகவோ படிப்பில் ஆர்வத்தைக் காட்டக்கூடும் ; படித்தால்தான் மதிப்புடன் வாழலாம், படிக்காவிட்டால் பிறர் தம்மைக் குறைவாக மதிப்பர் என்ற உண்மை எப்பொழுதாவது புலணுகிப் படிப்பதில் ஆர்வத்தைக் காட்டலாம். நல்ல சூழ்நிலையில் வாழ வசதியற்ற குறைமதியுள்ள குழந்தைகள்தாம் ஆசிரியர்களுக்குச் சதா ஏதாவது பிரச்சினைகளைத் தந்து கொண்டேயிருப்பர். கற்பிக்கும் துறையில் புதிய புத்தகங்கள் தோன்றுவதற்கும், புதிய முறைகள் எழுவதற்கும் இவர்களே காரணமாக இருக்கின்றனர். இவர்களின் மன நிலையையும் வாழும் சூழ்நிலையையும் அறியாது அவர்களுக்குச் சாதாரண முறையில் படிப்பைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பயன்காண முடியாது. அடிப்படையாகச் செய்யவேண்டிய சிலவற்றைச் செய்தபிறகு கற்பித்தால்தான் ஓரளவு பயனேக் காணலாம்.

படிப்பில் குழந்தைகளின் ஆர்வம் : பட்டறிவு முதிர்ந்த எவரும் குழந்தைகள் படிப்பதற்கு எப்பொழுது ஆயத்த மாக உள்ளனர் என்பதைக் கூறிவிடுவர். நல்ல சூழ்நிலையில் ஐந்தரையிலிருந்து ஆறு மன வயது முடிவதற்குள் படிக்கும் ஆர்வம் குழந்தைகளிடம் நன்கு தலைகாட்டும். அப்பொழுது குழந்தைகள் கதைகளைக் கேட்பதில் ஆர்வங் காட்டுவர் ; படங்களுள்ள புத்தகங்களைப் புரட்டுவதில் விருப்பங் காட்டுவர். புத்தகங்களில் பார்க்கும் ஒரு சில சொற்களைக் காட்டி இஃது என்ன? அஃது என்ன?’ என்று. வினவுவர். சில குழந்தைகள் தமக்குப் படிக்கத் தெரியும் என்று பாசாங்கு செய்வது முண்டு ; இன்னும் சில குழந்தைகள் தம்மருகேவுள்ள புத்தகம் அல்லது செய்தித்தாளைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு நினைவிலிருந்து