352 தமிழ் பயிற்றும் முறை
பெற்றிருக்கும் இன்று உடல் வயதைவிட மணவயதைக்கொண்டுதான் இதை அறுதியிடல் வேண்டும் என்பதை அறிகின்ருேம். குழந்தைகள் படிக்கும் ஆற்றலே அடைவது அவர்கள் வளரும் சூழ்நிலையையும் அவர்கள் மனப்பக்குவம் அடைந்திருப்பதையும் பொறுத்தது. அமெரிக்கக் கல்விப் பரிசீலனைக் குழு ஒன்று ஆறரை வயது முடிந்த பிறகுதான் குழந்தைகளுக்குப் படிப்பு தொடங்கவேண்டும் என்று சோதனைகளால் முடிவு செய்துள்ளது. குழந்தைகளின் அறிவு நிலை, அவர்கள் வாழும் சூழ்நிலை ஆகிய இரண்டு கூறுகளையும் நீக்கித்தான் இம்முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆறரை வயது நிறைவெய்திய குழந்தைகளும் படிக்கக்கூடிய மணவயதை (Mental age) எய்தாமலிருக்கலாம்; படிக்கும் மணவயதை அடைந்தாலும் வாழும் சூழ்நிலையின் காரணமாக அவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் எழாமலும் இருக்கலாம். சூழ்நிலை வசதியாக இருந்து பாப்பாப் பாட்டுக்கள், செவிலிப் பாட்டுக்கள், கதைகள், பழ மொழிகள் முதலியவைகளே அடிக்கடிக் கேட்கும் வாய்ப்புக்களும், சற்று விரைவாகவும் நன்ருகவும் பேசும் வாய்ப்புக்களும் பெற்றுள்ள குழந்தைகள் ஆறரை வயது நிறைவதற்கு முன்பே படிப்பில் ஆர்வத்தைக் காட்டக்கூடும். எனவே, குழந்தைகள் படிப்பதற்கு ஆர்வங்காட்டும் வயது அவர்களின் அறிவு, அவர்கள் வாழும் சூழ்நிலை, அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகிய கூறுகளைப் பொறுத்துள்
ளது என்பதை அறிதல் வேண்டும்.
கற்ருேர்களும் படிக்கும் சூழ்நிலைகளும் அமைந்த இல்லங்களினின்றும் வரும் அறிதிறன் மிக்க குழந்தைகள் படிப்பை எந்த முறையில் கற்றுக்கொடுத்தாலும் அதை விரைவாகப் பற்றிக்கொள்ளுவர் ; அவர்களுக்கு எந்த முறையும் தேவையில்லை என்றுகூடக் கூறிவிடலாம். olunt p 515th (Linguistic resources) @3bsor; oisosugi குறைவாயுள்ள இல்லங்களினின்றும் வரும் அறிதிறன் மிக்க
- The Board of Education Consultative Commi
ittee’s Report ; Infant and Nursary Schools p. I33-5.