பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 2莎夏

2. படிப்பு தொடங்க வேண்டிய நிலை

குழந்தைகள் தொடக்கநிலைப் பள்ளிகளில் சேர்ந்த வுடனே சில ஆசிரியர்கள் படிப்பைத் தொடங்கி விடு. கின்றனர். படிப்பின் தன்மையையும் நோக்கத்தையும் கவனித்தால் இது தவறு என்பது தெரியவரும். அச்சில் காணும் சொற்களே அறியவேண்டுமானுல், குழந்தைகளின் சொற் களஞ்சியம் (Vocabulary) பெருகியிருக்கவேண்டும். அவர்கள் தெளிவான வாக்கு வன்மையையும் பெற்றிருக்கவேண்டும். சுற்றுப் புறங்களையும் பல இயற்கை நிகழ்ச்சிகளே யும் நேரில் பார்த்துப் போதுமான பட்டறிவு பெருத குழந்தை, கள் சொற்கள் உணர்த்தும் பொருள்களை அறிய இயலாது. தம் பட்டறிவில் பார்த்தும் கேட்டும் துய்த்து வரும் பொருள். களைக் குறிக்கும் சொற்களே முதலில் படிக்கவேண்டும். நேரில் கண்ட நிகழ்ச்சிகள்தாம் குழந்தைகளுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஆசிரியர்களோ பெற்ருேர்களோ பல இடங்களையும் காட்சிகளையும் நேரில் காண்பதற்குக் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டும். வாய்மொழிப் பயிற்சிக்கு அனுகூலமாயிருக்கும் கதைகள், உரையாடல்கள், பாடங்கள், படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திச் சொற்கள் சொற்ருெடர்கள் ஆகியவற்றின் கருத்தை அவர்கட்கு நன்கு விளக்க வேண்டும். இவ்வாறு தரும் பயிற்சிகளினுல் குழந்தைகளின் மனம் பக்குவப்பட்டு அவர்களிடம் கருத்துனரும் ஆற்றல் சிறிது சிறிதாக வளரத் தொடங்கும். ஆசிரியர்களும் பெற்ருேங்களும் பிறரும் புத்தகங்களைப் பார்ப்பதையும் படிப்பதையும் குழந்தைகள் கண்ணுறும் பொழுது படிப்பில் அவர்களுக்கு ஆர்வம் எழுதல்கூடும். இவ்வாறும் ஆர்வம் எழும் காலந்தான் குழந்தைகளுக்குப் படிப்பைத் தாடங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஐம்பது ஆண்டுகட்கு முன்னிருந்த ஜான் ட்யூயி என்னும் பேராசிரியர் எட்டு ஆண்டுகள் நிறை வெய்திய குழந்தைகளுக்குத்தான் படிப்பு தொடங்கப் பெறவேண்டும் என்று கூறிஞர். உளவியற்கலை ஓரளவு நன்கு விளக்கம்.