பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தமிழ் பயிற்றும் முறை

அறியலாம். வரிவடிவங்களே ஒலி வடிவங்களாக அடையாளம் அறிந்து அதன் திருத்தத்தை உணர்வதற்கும், தனிவடிவங்களைக் கூட்டிச் சொற்களாக ஒலித்தற்கும், படித்தவர்கள் ஏட்டிலிருந்து படிப்பதைப் படிக்கத் தெரியாத வர்கள் தொடர்ந்து அறியவும், படிக்கும் பகுதிகளே மனப் பாடம் செய்யவும் வாய்விட்டுப் படித்தல் உதவியிருக்கக் கூடும். முதல் இரண்டு காரணங்களும் படிப்புக்கு அடிப்படையாக என்றும் அழியாமல் இருப்பவை. ஏனேய இரண்டு காரணங்களும் இன்றுபோல் அச்சுப் புத்தகங்கள் பெருகியிராததாலும், பெரும்பாலான மக்கள் கல்வியறிவு இல்லாதிருந்த பழங்காலத்தில் படித்தவர்கள் தம் படிப்பைப் பிறருக்கு உதவும் பொருட்டுக் கைக்கொண்ட முறைகள் எனவும் அறியவேண்டும். இந்த இரண்டு காரணங்களும் இன்று எங்கெங்கே எந்தெந்த அளவுக்கு இன்னும் இருக்கின்றனவோ அந்தந்த அளவுக்கு வாய்விட்டுப் படித்தலில் பள்ளி மாணுக்கர்களுக்குப் பயிற்சித் தேவையாகும்.

வாய்விட்டுப் படித்தலின் பண்புகள் : வாய்விட்டுப் படித்தல் வாய்க்குட் படித்தலேவிட கடினமான செயலாகும். வாய்க்குட் படித்தற்கு வேண்டிய திறன்களுடன் வேறு பல திறன்களும் இதற்குத் தேவையாக உள்ளன. வாய்விட்டுப் படித்தலில் மாணுக்கர்கள் சொற்களே அறிதல், பழக்கமில்லாத சொற்களே உய்த்துணர்தல், கருத்துணர்தல், சொற்களின் உச்சரிப்பு அவற்றை ஒரு குறிப்பிட்ட முறையில் வெளியிடல், புத்தகத்தை வைத்துக்கொண்டு எதிரிலிருப்பவர்களேக் கூச்ச மின்றிப் பார்த்தல் முதலியவை அதிகமாக வேண்டப்படுபவை. வாய்க்குட் படித்தலில் புதிய சொற்களேச் சமாளிக்கும் நிலே வேறு; வாய்விட்டுப் படித்தலில் அவற்றைச் சமாளிக்கும் நிலை வேறு. வாய்விட்டுப் படித்தலில் அவை சில சமயம் படிப்பையே நிறுத்திவிடவும் கூடும்; பொருள் தெரியாது மேலே செல்லுவதும் கடினம். வாய்க்குட் படித்தலில் இந்நிலை ஏற்படி

  • இது தமிழில் சிரமமில்லே.