பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பு 28 1

னும் வெளியில் தெரியாது. எனவே, பல கூறுகளில் வாய்விட்டுப் படித்தல் கடினமானது.

வாய்விட்டுப் படித்தல் படிப்போரைப் பல சங்கடங்களுக் குள்ளாக்கும் ; பலருக்குமுன் அவையில் வந்துநிற்பது கடினம்தான். பட்டறிவு கைவரப்பெற்ற வளர்ந்தவர்களும் அச்சத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பதைப் பார்க்கத்தான் செய்கின்ருேம். அவர்கள் சாதாரணப் பகுதிகளேயே பல தவறுகளுடன் படிக்கின்றனர், பழக்கப்படாத சொற்கள் பயின்று வருதல், கண் சாணின் குறைவு, கூட்டத்தின் முன்னர் வந்து நிற்கும் பழக்கமின்மை முதலியவை குழந்தைகளிடம் உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்கிவிடும்.

முதல் ஒத்திகையால் சொற்களில் பழக்கம், கருத்துணர்வு முதலியவை ஏற்படினும், உச்சரிப்பு, வெளியிடுந் திறன், புத்தகத்தைப் படித்துக்கொண்டு பலர்முன் நிற்கும் நில முதலியவற்றில் சிரமம் இருக்கத்தான் செய்யும். பலவித பயிற்சிகளால் சிரமங்களே க் குறைக்கலாம் ; படிப் படியாக அவைக்கூச்சத்தையும் போக்கிவிடலாம்.

வாய்விட்டுப் படித்தலை வளர்க்கும் வாய்ப்புக்கள் : பள்ளி வாழ்க்கையில் வாய்விட்டுப் படித்தலே வளர்ப்பதற்குப் பல வாய்ப்புக்கள் உள்ளன. கூட்டத்தில் படிப்பதற்கு முன்னர் சரியான ஒத்திகை தரப்பெறுதல் வேண்டும். பள்ளியில் நடைபெறும் வானெலிப் பேச்சு, செய்திகளைப் படித்தல், நாடகத்திற்கு முன்னுரை படித்தல், சொற்போரில் கலந்து கொள்ளுதல் போன்ற நிகழ்ச்சிகளால் மாணுக்கர்கட்கு வாய்விட்டுப் படித்தலில் நல்ல வாய்ப்புக்களேத் தரலாம். மக்களாட்சியில் சிறந்த குடிமகனுக்கு வாய்விட்டுப் படித்தலின் திறன் மிக மிக இன்றியமையாததாகும்.

பள்ளியில் உணர்ச்சியுடன் வாய்விட்டுப் படிக்குந் திறன் எல்லோரிடமும் அமையாது. இதற்குத் தனிப்பட்ட பயிற்சி அளிக்கப்பெறல் வேண்டும். இதில் திறன் இல்லாத