பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 தமிழ் பயிற்றும் முறை

வர்களே வற்புறுத்தாமல் அவர்கள் தன்மைக் கேற்ற வேறு செயல்களில் ஊக்குவித்திடலாம்.

7. வாய்க்குள் படித்தல்

இன்றைய வாழ்க்கையில் அதிகமாகத் தேவையுள்ளது வாய்க்குட் படிப்பு. ஒலேச் சுவடிகள், கைச்சுவடிகள், அச்சு நூல்கள் முதலியவற்றை மனத்திற்குள்ளேயே, வாய். திறவாமல், உதடுகள் அசையாமல், தொண்டையின் அசைவுகூட இல்லாமல், ஒலித்தல் உச்சரிப்பு இன்றி முணுமுணுப்புகூட இல்லாமல் படித்தலேத்தான் வாய்க்குட் படித்தல் 4 (Silent reading) என்கின்ருேம். இவ்விதப் படிப்பை மிக அண்மையில்தான் முக்கியமெனக் கருத லாயினர். சென்னை மாநிலத்தில் 1989-இல் வெளியான தொடக்க நிலைப்பள்ளி மொழிப்பாடத் திட்டத்தில்தான் இது குறிப்பிடப்பெற்றுள்ளது. என்ருலும், இது சிறிதும் கவனம் பெறவில்லை என்று சொல்லுவதற்கில்லை. எங்கோ ஒரு சில இடங்களில் அத்தி பூத்தமாதிரி ஆசிரியர்கள் இதில் கவனம் செலுத்தி வந்தனர்; சில மாணுக்கர்கள் தாமாகவே இதனை வளர்த்துக் கொண்டனர். பலர் இதை வளர்த்துக் கொள்ளாமல் விட்டதால், வாழ்க்கையில் ஏதாவது செய்தியைப் படிக்க நேரிடும்பொழுதும், செய்தித் தாள்களைப் படிக்க நேரிடும்பொழுதும் வாய்விட்டுப் படித்தால்தான் கருத்துணரும் நிலையிலுள்ளனர். இன்று தாய்மொழியில் மறுமலர்ச்சி இலக்கியங்கள் அதிகமாகத் தோன்றி வருவதால், பள்ளியில் இம்முறையில் பயிற்சி தராவிட்டாலும், மாணுக்கர்களிடம் இப்பழக்கம் தானுக வளர்ந்து வருகின்றது.

  • ஆங்கிலத்திலுள்ள Silent reading என்ற சொற்ருெடரை மெளனவாசிப்பு என்ற வடமொழித் தொடராகப் பெயர்க்கப்பெற்றிருப்பதைத் தான் தமிழில் * வாய்க்குட் படித்தல் என்று மீண்டும் பெயர்த்துக் கூறப்படுகின்றது. கண்ணுேட்டப் படிப்பு’ என்ற தொடர் இதனை இன்னும் தெளிவாக விளக்கும்.