பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுதுக்கூட்டலும் 3 i 1

பண்படாத எத்தகைய குறியீடுகளையும் கொண்டு எழுத்துக் கலேயைப் பெற்ற எந்தக்கூட்டத்து மக்களாக இருப்பினும் அவர்கள் நாகரிக ஏணியில் அதிக உயரத்துக்குச் சென்றுள்ளனர் என்றே சொல்ல வேண்டும்.

பேச்சு மொழியைக் கற்ற மனிதனுக்கு எழுதக் கற்குமாறு துண்டியது எது என்பதை எண்ணிப்பார்த்தால் தன்னெதிரிலோ அண்மையிலோ இல்லாத ஒருவருக்குத் தனது கருத்தைத் தெரிவிக்கவேண்டும் என்ற எண்ணமே யாகும் என்பது தெரியவரும். இடத்தின் சேய்மையைக் கருதி இவ்வாறு செய்யப்பட்ட முயற்சி காலத்தின் சேய்மையைக் கருதியும் பயன்படுத்தப்பட்டது. தமது காலத்தில் இல்லாத மக்களுக்கு-பிற்காலத்தில் வாழப்போகும் தம் பின்வருவோருக்கு-தமது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அவற்றைக் கல்லிலும் செம்பிலும் பிறவற்றிலும் மக்கள் பொறித்துவைக்கத் தலைப்பட்டனர். இவ்வாறு சேய்மையில் உள்ளவர்களுக்குத் தமது கருத்துக்களே அறிவிக்க மக்கள் முதன்முதலாகக் கையாண்ட எழுத்துக்கள் எவை ? அவற்றை அவர்கள் எங்ஙனம் கற்றனர்? இன்று வழக்கத்திலுள்ள எழுத்துக்களேத் தொடக்கத்திலேயே அவர்கள் கண்டறிந்தனரா ? அல்லது வேறுவிதமான எழுத்துக்களைக் கையாண்டிருந்தால் அவை எவ்வெவ்வாறெல்லாம் வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை யடைந்தன ? என்பன போன்ற விளுக்களே ஆராய்ந்தால் ஓரளவு எழுத்துக்கலையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடியும்.

குகைகளில் வாழ்ந்து வந்த ஆதி மனிதர்களும் ஓவியம் வரைந்து வந்தனர் என்பது அவர்கள் விட்டுப் போயுள்ள அறிகுறிகளால் அறியலாகும். இவற்றுள் சில இன்று கொடிகள் முதலிய சின்னங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவியத்தின்மூலம் தம் கருத்துக்களே வெளியிடலாம் என்று அறிந்த மக்கள் தொலைவிலிருப்பவர். களுக்கும் நிலையாக எழுதிவைப்பதற்கும் இதையே வழியாக அமைத்துக்கொண்டனர். இந்த முயற்சியே ஒவிய,