பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 6 தமிழ் பயிற்றும் முறை

காட்டச் செய்யலாம். இவ்வாறு எழுதி ஒரு சிறிது பழக்கம் ஏற்பட்ட பின்னர் கரும்பலகையில் ஆசிரியர் சற்று மங்கலாக எழுதிக் குழந்தைகள் அவற்றின்மீது கோலினக் கொண்டே சீமைச் சுண்ணக் காம்பினைக் கொண்டோ விளம்பும் பயிற்சியை மிகுதியாகக் கொடுக்கவேண்டும். கரும்பலகையில் எழுத்துக்களை அழியாத வண்ணத்தால் தீட்டிவிட்டால் பல குழந்தைகள் அவற்றின்மீது எழுதியும் அழித்தும் பயிற்சி பெறுவதற்கு எளிதாக இருக்கும்.

எழுதுதல் பல்வேறு சிறு இயக்கங்களைக் கொண்ட மிகவும் சிக்கலான ஒரு செயல். அதன் ஒரு பகுதி இயக்கப் பொறிநுட்பத்தையும் (Motor mechanism) மற்ருெரு பகுதி insură ăsâr (36.1&voluujuh (Work of the intellect) பொறுத்துள்ளன. குழந்தைகளிடம் எழுதும் செயல் எவ்வாறு நடைபெறுகின்றது? எழுதுதலில் உள்ள கூறுகள் யாவை? அவற்றை எவ்வாறு கையாளவேண்டும் ? என்பன போன்ற விவரங்களை மாண்டிஸாரி அம்மையார் தெளிவாக விளக்கியுள்ளார். ஒவ்வொரு தமிழாசிரியர்களும், அந் நூலே, சிறப்பாக 26-ஆம் இயலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

எழுதும்பொழுது உட்காரும் கில்ே : குழந்தைகள் எழுதும் பொழுது உடலைக் கோணலாகச் சாய்த்துக்கொண்டு உட்காருவதைத் தொடக்கத்திலிருந்தே தவிர்க்க வேண்டும். தொடக்கத்தில் இந்நிலை திருத்தப்பெருவிடின் குழந்தைகளின் உடலில் விகாரமான அமைப்பு ஏற்படக் கூடும்; முதுகும் கூனிவிடும். நேராக உட்கார்ந்து எழுதுமாறு வற்புறுத்தவேண்டும், அவர்கள் உட்காருவது அவர்களுக்குச் சுகமாக இருத்தல் வேண்டும், முன்புறமாய் அதிகம் சாயக்கூடாது. எழுதுகோலேக் குழந்தைகள் பிடிக்கும் முறையும் கவனிக்கப்படவேண்டும். மிகவும் கிட்ட அல்லது எட்டப் பிடித்தலையும், மிகவும் தளர்வாக

- * Maria Montessori; The Discovery of the child (Vide chap xxvi : The Mechanism of writing)