பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக் கூட்டலும் 335

(4) அகராதிப் பழக்கம் : எழுத்துக்கூட்டலில் ஐயம் நிகழுங்கால் உடனுக்குடன் அதைத் தீர்த்துக்கொள்வதற்கு ஒவ்வொரு மானுக்கரும் தமிழ் அகராதி ஒன்றை வைத்துக்கொண்டிருக்கவேண்டும். பெரும்பாலும் தமிழ் பயிலும் மாணுக்கர்கள் அகராதியை வைத்துக்கொள்வ. தில்லை ; தமிழ் மாணுக்கர்களிடம் அகராதிப் பழக்கமே சரியாக அமைவதில்லை. தமிழாசிரியர்கள் இதை வற்புறுத்துவதுமில்லே.

(5) எழுதிப்பழகல் : எழுதி எழுதிப் பழகித்தான் எழுத்துக்கூட்டறிவு உண்டாகவேண்டுமேயன்றி பழைய முறைப்படி குருட்டுப் பாடம் செய்விப்பதால் பயன் இல்லை. சொற்களே முழு உருவத்தில்கண்டு அவற்றை உச்சரித்துப் பொருளுணர்ந்து கொண்டபிறகே எழுத்துக் கூட்டிப் பழகவேண்டும். உளவியல் முறைப்படி முதலில் புலன் உணர்ச்சிக்கு வேலை கொடுத்துப் பின் தசைகளுக்கு இயக்கம் கொடுக்கவேண்டும். இளமைப் பருவத்தில் கட்புல அறிவே தெளிவும் விளக்கமும் ஏற்படச் சிறந்த துணையாகின்றது.

(6) சொல்லுவதை எழுதுதல் : எழுத்துக் கூட்டறிவை வளர்ப்பதற்குச் சொல்லுதை எழுதுதல் மேற்கொள்ளப்படு. கின்றது. மாணுக்கர்கள் தம் பட்டறிவாலும் படிப்பறிவாலும் கற்றுப் பொருள் தெரிந்துள்ள சொற்களின் எழுத்துக் கூட்டறிவை அளந்தறிவதற்கும், அதனே உறுதி செய்வ. தற்கும் இம்முறை சிறந்தது என்பதற்கு ஐயம் இல்லை. ஆளுல், புதிய சொற்களின் எழுத்துக் கூட்டறிவைக் கண்டறியவும் கற்பிக்கவும் இது சரியான வழியன்று. இதில் பலமுறை பிழையாக எழுதிப் பழகிவிட்டால் அப் பிழைகளே மனத்திற் படிந்துவிடவும் இடமுண்டு. எனவே, இதனே இடமறிந்து ஏற்ற முறையில் கையாளவேண்டும். கீழ் வகுப்புக்களில் இதனைச் சிறிது கையாளலாம்.

(7) பார்த்து எழுதுதல் : புதுச் சொற்களின் எழுத்துக் கூட்டறிவுக்குப் பார்த்து எழுதும் பயிற்சிகள் பெருந்துணை