பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 தமிழ் பயிற்றும் முறை

செய்யும். கீழ் வகுப்புக்களில் இப்பயிற்சிகளை ஆசிரியர்கள் மிகவும் வற்புறுத்தவேண்டும்.

(8) எழுத்துக் கூட்டு விளையாட்டுக்கள் : எழுத்துக்கூட்டலில் பன்முகப் பயிற்சி தருவதற்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. இவ் விளையாட்டுக்களால் மாளுக்கர் வெறுப்பும் சலிப்புமின்றி விருப்போடும் பற்ருேடும் தம்மை யறியாமலேயே எழுத்துக் கூட்டறிவைக் கற்றுக்கொள்வர். பேருக்கு ஓர் எழுத்தாகச் சொல்லி சொற்களே உண்டாக்கல், எழுத்து அட்டைகளைக்கொண்டு சொற்களைக் கட்டுதல், சொல்லேணிகளை அமைத்தல், ஒரு சொல்லைக் கூறி அச் சொல்லிலுள்ள எழுத்துக்களைக் கொண்டே வேறு பல சொற்களே உண்டாக்குதல், சொல்லின் இறுதி எழுத்தை முதல் எழுத்தாகக்கொண்டு சொற்களே உண்டாக்கல் போன்றவை அவற்றுள் சில. வேறு பல விளையாட்டு வகைகளை ரைபர்ன் நூல்களில் கண்டுகொள்க."

(9) பிழைகளை அவ்வப்போது களைதல் : மாணுக்கர்கள் எழுதியவற்றில் காண நேரிடும் பிழைகளை ஆசிரியர்கள் அவ்வப்பொழுதே களைதல்வேண்டும். தமிழாசிரியர்களைத் தவிர பிற பாடங்களைத் தமிழில் கற்பிக்கும் ஆசிரியர்களும் இதில் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். கரும்பலகையைப் பயன்படுத்தி ஆசிரியர் இப்பிழைகளைக் களையலாம். சரியான சொற்களை எழுதிக்காட்டி தவருனவற்றைவாயினுல் சொல்லிக் காட்டவேண்டும். இரண்டையும் எழுதிக்காட்டினல் தவருனவை மனத்தில் அமைத்தல் கூடும். ஒரு சிலர் எது சரி, எது தவறு என்பதையறியாமல் மயங்கவும் கூடும்.

(10) சில எழுத்துக்கள் : தமிழில் எழுத்துப் பிழைகளே உண்டாக்கக்கூடிய ரகர-றகர, லகர-ழகர-ளகர, நகர

  • Ruyburn : Suggestions for the Teaching of Mother

tongue in India. Suggestions for the Teaching of English

in India.