பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையெழுத்தும் எழுத்துக் கூட்டலும் 337

னகர-னகரங்கள் பயிலும் சொற்களே அடுத்தடுத்து எழுதி அவற்றின் பொருள் வேற்றுமையைக் காணுமாறு செய்யலாம். இவற்றை ஒரே சமயத்தில் காட்டுவதால் பயன் இல்லை. செய்யுள் உரைநடைப் பாடங்கள் நடைபெறும் பொழுதும், வாய்மொழிப் பயிற்சிகள் எழுத்துப் பயிற்சிகள் நடைபெறும்பொழுதும் அச் சொற்களைக் கையாளும் இடம் அறிந்து அவற்றை எழுதிக்காட்ட வேண்டும். மேற்கூறிய எழுத்தொ லிகளே உச்சரிக்கும்பொழுது இருக்கும் நாவின் நிலைகளைப் படங்களின் வாயிலாகக் கற்பிக்கலாம். நல்ல வண்ணந்தீட்டிய படங்களே ஆயத்தம் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். பிற எழுத்தொலிகளையும் இம்முறையில் கற்பிக்கலாம்.

சில சொற்கள் : சில சொற்கள் உலக வழக்கில் தவருக வழங்குகின்றன. சில சொற்கள் குறைவான கல்வியறிவுடையவர்களால் தவருக எழுதப்பெறுகின்றன. சில வடமொழிச் சொற்களும் தவருகவே எழுதப்பெறுகின்றன. இத் தவறுகளேத் தொடக்கத்திலிருந்தே களைதல் வேண்டும். இன்னும் நாக்கின் செய்கை வேறுபாடு முதலியவற்ருல் ஒரே இடத்தில் பல எழுத்துக்கள் பிறக்கும். எடுத்துக்காட்டாக ர-ற இரண்டும் ஒரே இடத்தில் பிறக்கின்றன. ஆயின், நுனி நாக்கு மேல்நோக்கி வளைந்து மேல்வாயின் கீழிடத்தைத் தடவுதலால் ரகாரமும், நன்ருகத் தாக்கி ஒன்றுதலால் றகாரமும் பிறக்கின்றன. தமிழில் இப்பொழுது றகாரத்தையும் நகாரத்தையும் நன்கு ஒலிப்பதில்லை. இவ்வெழுத்துக்களின் பிறப்பிடத்தைக் கவனித்து ஒலித்தல் வேண்டும். சிலர் ழகாரத்தை ளகாரம்போல் ஒலிக்கின்றனர். எழுத்துக்களேச் சரியாக ஒலிக்காவிட்டால் சொற்களின் பொருள் வேறுபட்டு விடும் ; எழுதுவோரும் தவருக எழுதக்கூடும். இன்னும் சிலர் பிழையாக உச்சரிப்பதால் பிழையாகவே எழுதவும் நேரிடுகின்றது. இவற்றைக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுக் களால் அறியலாகும்:

த-23