பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கிள்" 1 7

பாடாண் என்பவை, வெட்சித்திணை பகைவருடைய பசுக் கூட்டங்களை அவர் அறியாமல் கொணர்ந்து பாதுகாத்தலைச் செய்வது. நாடு பிடிக்கும் ஆசையால் ஒரரசன் மற்றேரர்சன்மீது தண்டெடுத்துப் போருக்குச் செல்லுதல் வஞ்சித்தினே. பகைவர் அரணே முற்றுகையிடுவதாகச் சொல்வது உழிஞைத்தின. வீரச்சிறப்பு வெளிப்படும் பொருட்டு வேந்தர் பொருதலே எடுத்தியம்புவது தும்பை. போரில் தலையிடும் அரசர்கள் முதலியவர்களின் தொழிலைச் சிறப்பித்து ஒதுதல் வாகை. காஞ்சி நிலையாமையைப் புலப்படுத்துவது. புகழ்தல், வாழ்த்துதல் வகையால் பிறரைச் சிறப்பித்துப் பாடுதல் பாடாண் திணையாகும். பன்னிரு. படலம், புறப்பெர்ருள் வெண்பாமாலை போன்ற நூல்கள் தொல்காப்பியர் கூறிய திணைகளில் சிலவற்றை இரண்டாகப் பிரித்தும், அகத்தைச் சார்த்தி வைத்த கைக்கிளே பெருந் திணைகளைக் கூட்டியும், வேறு சிலவற்றைச் சேர்த்தும் புறப்பொருளேப் பன்னிரண்டாகப் பகுத்துப் பேசுகின்றன. இவற்றின் விரிவுகளே உரிய நூல்களில் கண்டு கொள்க." அகப்பொருள், புறப்பொருள் துறைகளே வைத்துப் பாடிப் பிற்காலப் புலவர்கள் தம் காவியங்களைச் சிறப்பித் திருக்கின்றனர். பண்டிருந்து இன்று வரையில் தோன்றி யுள்ள இலக்கியங்களைப் படிக்கும்பொழுது அவை நேர்முக மாகவும் மறைமுகமாகவும் அவ்வக் காலங்களில் வாழ்ந்த மக்களின் சமூக இயலையும் பண்பாட்டையும் விளக்குவதை அறியலாம்.

வாழ்க்கையை வளப்படுத்தி நீதிகளைப் புகட்டுதல் : அன்ருட வாழ்க்கையில் மொழி பயன்படாத துறைகளே இல்லை. பேசுதல், கேட்டல், எழுதுதல் ஆகிய மூன்று செயல்களும் பயன்படாத வாழ்க்கைத் துறைகளே இல்லை எனலாம். கல்வி நிலையங்களே விட்டு வெளியேறிய மாணுக் கர்கள் வாழ்வில் நுழையும்பொழுது நன்ருகப் பேசவும், படிக்கவும், எழுதவும் ஆற்றல் பெற்றிருக்கவேண்டும். அன்ருட வாழ்க்கையிலும் இம்மூன்று திறன்களும் பெரிதும் * சுப்பு ரெட்டியார் ந : தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை (பழனியப்பா பிரதர்ஸ்)

த-3