பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 தமிழ் பயிற்றும் முறை

பொருளின் தோற்றம், நிகழ்ச்சியின் அமயம், பொருளின் வரையறை ஆகியவற்றுள் யாதேனும் ஒன்று முகவுரையாக அமையவும் கூடும்.

உடலே கட்டுரையின் சிறந்த பகுதியாகும். முகவுரைக்கும் முடிவுரைக்கும் இடையில் இஃது இருக்கும். எழுத எடுத்துக்கொண்ட பொருள்பற்றிய இன்றியமையாத கருத்துக்களும், விளக்கங்களும், குறிப்புக்களும், மேற்கோள்களும், எடுத்துக்காட்டுக்களும் இப் பகுதியிலேயே அடங்கியிருக்கும். குறிப்பிட்ட கால அளவில், இட அளவில் அனைத்தையும் எழுத இயலாததால், இன்றியமையாதன. வற்றைமட்டிலும் தேர்ந்தெடுத்துக் கோவைப் பட அமைக்க வேண்டும். கட்டுரையின் உடல் எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்ப நீண்டும், சுருங்கியும், பல கருத்துக்களைத் தழுவினதாயும் இருக்கும் ; இந்நிலையில் உடல் பல பத்திகளேக் கொண்டும் இருக்கும்.

கட்டுரையின் முடிபு படிப்போர் மனத்தில் பசுமரத்தாணியெனப் பதியுமாறு அமைதல் வேண்டும். ஒரு செயலின் விளைவு எவ்வளவு முக்கியமானதோ, அவ்வளவு முக்கியமானது ஒரு கட்டுரையின் முடிவும். முடிவின் வடிவு முற்கூறியவற்றின் சுருக்கத்தொகுப்பு, மேற்கோள், பழமொழி, கட்டுரையாளரின் கருத்துவாக்கியம் இவற்றுள் யாதானும் ஒன்ருக இருக்கலாம்.

ஒரு கட்டுரையின் முகவுரை, உடல், முடிபு ஆகிய மூன்றும் தலையும் உடலும் காலும் போன்றிருத்தலால், அதற்குத் தகுந்தவாறு முகவுரை முடிவுரைகளேச் சுருக்க மாகவும் உடலுரையைப் பெருக்கமாகவும் அமைத்துக் கொள்ளவேண்டும். கட்டுரையின் முதல் வாக்கியம் படிப் போரின் வேட்கையைத் தூண்டக்கூடியதாகவும், இறுதி வாக்கியம் அதைத் தீர்க்கக் கூடியதாகவும் இருந்தால். கட்டுரை சிறப்பாக அமையும்.