பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 6 தமிழ் பயிற்றும் முறை

களையும் அறிந்து கொள்ளுகின்ருேம். நான்காவது படியில் இரு மொழிகளின் பொதுப்போக்கு, நடைப்போக்கு, உயி ரோட்டம் முதலிய பண்புகளே அறியும் திறன் கைவரப் பெறுகின்றது.

மொழிபெயர்ப்பில் கவனிக்க வேண்டிய சில குறிப் புக்கள் உள்ளன. அவற்றை ஈண்டு நோக்குவோம் : சொல் லுக்குச் சொல் மொழிபெயர்த்தல் சரியான மொழிபெயர்ப் பாகாது. பிறமொழிச் சொற்ருெடர்கள், மரபுத் தொடர்கள், பழமொழிகள் முதலியவற்றின் பொருள்களைச் சொல்லுக்குச் சொல் கூறுதல் என்பது இயலாததொன்று; அப்படிப் பெயர்ப்பினும் அப்பகுதி உயிரற்ற சவம்போல் தோன்றும். எடுத்துக்காட்டாக, ஆங்கில மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு ஒரு பகுதியைப் பெயர்த்துக் கூறும்பொழுது அந்நாட்டின் பழக்க வழக்கம், நடை உடை பாவனை, எண்ணம், உணர்ச்சி, சூழ்நிலை, மொழித் தொடரமைப்பு முதலியவற்றை நம்மவற்றுடன் ஒப்பிட்டு மொழிபெயர்க்க வேண்டும். ஆளுல், சொல்லுக்குச் சொல் சில சொற்ருெடர் களுக்குப் பொருள் தரலாம். எடுத்துக் காட்டாக Turn the back-புற முதுகு காட்டு, அல்லது வெந்நிடு Face is the index of the mind-அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பவற்றைக் கூறலாம்.

மேற்கூறியவாறு எல்லாத் தொடர்களையும் இவ்வாறு Glors Guluff; 3,5b orgöö)31. Take the seat, breathed his last என்ற சொற்ருெடர்களே அங்ங்னம் மொழி பெயர்த்தல் ஆகாது. இவற்றை முறையே "அமர்”, “ஆவி பிரிந்தது” என்று மொழி பெயர்க்க வேண்டும். Arms in arms என்பதைப் புயத்தொடு புயம் என்பதைவிட தோளோடு தோள்’ என்பதே சிறந்தது. Nose-cut என்பதை அவமான மடைதல் என்று மொழி பெயர்த்தலே *fi.” “Money makes many things” srsörp sebiảießscă

சூர்ப்பண கைக்கு நேர்ந்த அவமானம் (Nose-cut) இலங்கைப் பேரரசுக்கு நேரிட்ட அவமானமாகும் !