பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18 தமிழ் பயிற்றும் முறை

ளால் தெரிந்து அவர்கள் அறிந்திருந்தால் மொழி பெயர்ப்பை வாய்மொழியாகத் தொடங்கலாம். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வாக்கியமாக மொழிபெயர்க்கும்படி செய்து அவற்றிலுள்ள தவறுகளைப் பிற மாணுக்கர்களேக்கொண்டு திருத்தலாம். பகுதி முழுவதும் வாய்மொழியாக நல்ல முறையில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு, எழுதும் பயிற்சி. யைத் தரலாம். தொடக்கத்தில் இவ்வாறு விரிவான முறை யைக் கையாளவேண்டுமேயன்றி படிப்படியாக இவற்றைக் குறைத்து மானுக்கர்கள் தாமாக எழுதும் பழக்கத்தை உண்டு பண்ணவேண்டும்.

மாணுக்கர் எழுதும் மொழி பெயர்ப்பு எளிய இனிய தூய தமிழ் நடையில் அமையவேண்டும். எழுத்துப் பிழை கள், சொற்பிழைகள், சொற்ருெடர்ப் பிழைகள், கருத்து முடிபுப் பிழைகள் முதலியவை நேரிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எழுதி முடிந்தபின் மானக்கர் எழுதிய வற்றைத் திரும்பப் படிக்கும் பழக்கத்தை முதலிலிருந்தே வற்புறுத்த வேண்டும். இப்பழக்கம் இயல்பாக அமையப்பெறின் பிறகு பல தவறுகளே அவர்களே திருத்திவிடலாம். பிறகு ஆசிரியர் அவற்றைத் திருத்தவேண்டும். கட்டுரைப் பயிற்சிகள் திருத்தும்பொழுது கையாளவேண்டிய குறிப்புக்களேயே ஈண்டும் கையாளலாம்?.

மாளுக்கர் எழுத்து வேலையில் காணப்பெறும் குறைகளும் பிழைகளும் : சாதாரணமாக மானுக்கர்கள் எழுதும் கட்டுரைகளில் இப்பிழைகளைக் காணலாம் : எவ்வளவு சொன்ஞலும் சிலர் வரந்தையில் (Margin) பயிற்சி எண், பயிற்சி கொடுக்கப்பெற்ற தேதி, கட்டுரையின் தலைப்பு ஆகியவற். றைக் குறிப்பதில்லே. சிலருடைய கட்டுரைகளில் ர-ற; ல-ளழ; போன்ற எழுத்துப் பிழைகள் மலிவாக இருக்கும்; சந்திப்பிழைகள் ஏராளமாகக் காணப்பெறும். ஒரு சில கட்டுரை. களில் ஒருமை-பன்மை மயக்கம், செய்வின-செயப்பாட்டு வினேகளில் தவறுகள் போன்ற இலக்கணப் பிழைகளைக்

  • இந்நூல் பக்கம்-423,