பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 41 9

காணலாம். சிலர் சொற்களையும் சொற்ருெடர்களையும் பொருளறிந்து கையாளுவதில்லை ; சிலர் வாக்கிய அமைப்பைச் சரியாகக் கவனித்து எழுதுவதில்லை. கட்டுரைகளில் திட்டமான தொடக்கம், செம்மையான நடை, சரியான முடிவு ஆகியவை இருப்பதில்லை. கட்டுரைப் பொருளமைப் பிலும் காரணகாரியத் தொடர்பின்மை, தலைப்புக்குப் பொருந்தாத பொருள்களைப் புகுத்துதல், தவருன கருத்துக்களைப் புகுத்துதல், செய்திக் குறைவு போன்ற பொருட் பிழைகளும் காணப்படும்; சில கட்டுரைகளில் உணர்ச்சியே இராது. சில மாணுக்கர்கள் பத்திகளைப் பிரிப்பதில்லை; சிலர் பத்திகளின் அமைப்பைக் கவனியாது பிரித்தெழுது வர். சிலர் நிறுத்தற் குறிகளைச் சரியாகவே இடுவதில்லை. சிலர் தாம் எழுதும் கையெழுத்தைக் கவனித்தே எழுதுவதில்லை.

மாணுக்கர் செய்யும் பிழைகளே அறியாமையால் ஏற்படு வன, கவனக்குறைவினுல் நேரிடுவன என இரண்டு பிரிவு களாகப் பிரிக்கலாம். அறியாமையினுல் நேரிடும் பிழைகளே மாணுக்கர்களுக்குத் தனித்தனியாகவோ, குழு முறையிலோ எடுத்துக்காட்டிதான் ஆசிரியர் திருத்தவேண்டும். கவனக்குறைவினுல் ஏற்படுவனவற்றைக் கவனக்குறைவு இல்லாதவாறு செய்து நீக்கலாம். எழுத்துக்களைக் கவனித்து நிறுத்தி எழுதும்படி செய்தல், எழுதிய கட்டுரை. யைத் திரும்பப் படிக்கச் செய்தல், நிறுத்தற் குறிகளை ஏற்ற இடங்களில் இடச் செய்தல் போன்றவற்றைக் கவனிக்கச் செய்தால் பிழைகளைக் குறைக்கலாம். ஐயந் தரத் தக்க சொற்பட்டிகளேக் கையாளுதல், கீழ்வகுப்புக்களில் சொல்லுவதெழுதும் பயிற்சிகள் தருதல், அகராதிப் பழக்கம் ஏற்படுத்தல் போன்ற வழிகளால் எழுத்துப்பிழைகளையும் சந்திப்பிழைகளையும் நீக்கலாம். தக்க மொழிப்பயிற்சி. களினுல் ஏனய பிழைகளையும் களையலாம்; அவை நேரிடாமலும் தடுக்கலாம். குறிப்புச் சட்டகம் எழுதிய பிறகு கட்டுரை களே எழுதுதல், தேவையான அளவு வாய்மொழிக் கட்டுரைப் பயிற்சி ஆகிய வழிகளமைத்தால் பொருட் டொடர்புப் பிழைகள் நேரிடா, கட்டுரைகளைத் திருத்திய பிறகு