உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 தமிழ் பயிற்றும் முறை

இவற்றை ஏற்ற முறையில் எடுத்துக் காட்டி விளக்கிளுல் பிழைகள் நாளடைவில் குறைந்து கட்டுரைகள் நன்முறை. யில் அமையும்.

எழுத்துப் பயிற்சிகளைத் திருத்துதல்

மாணுக்கர்கள் எழுதிய கட்டுரைகளைத் திருத்தும் வேலே ஆசிரியத் தொழிலில் மிகக் கடினமானதொரு பகுதி. இப்பகுதி அருமையானதும் இன்றியமையாததுமாகும். எழுத்துப் பயிற்சி மாணுக்கர்கட்கு எவ்வளவு இன்றியமை யாததோ, அதுபோலவே ஆசிரியர்கள் கட்டுரைகளைத் திருத்திக் குறைகளை எடுத்துக்காட்டுவதும் மிகவும் இன்றியமையாதது. தாம் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாவிடில், எழுத்துப் பயிற்சியினுல் மானுக்கர்களுக்கு யாது பயன்? தவறுகளே அவ்வப்போழுது ஆங்காங்கு எடுத்துக்காட்டவேண்டும். ஒருமுறை செய்த தவறுகளே மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சி செய்யவேண்டும். உளவியற்படி, தவறுகளே மீண்டும் மீண்டும் செய்தால் அது நீக்கமுடியாத பழக்கமாகவே அமைந்து. விடக்கூடும். கட்டுரை திருத்துவது என்பது ஒரு தனிக் கலை; சிறப்பான கலை. கட்டுரை திருத்துவது தேர்வு விடைத்தாள்களே மதிப்பிட்டு மதிப்பெண்கள் தருவது போன்றதல்ல ; அது தேர்ச்சி பெருக உதவும் ஒரு. சாதனமுமாகும். கட்டுரையைத் திருத்தும்பொழுது அதை எழுதிய மானுக்கனே அருகில் வைத்துக்கொண்டு திருத்திஞல் நிறைந்த பயன் விளேயும். சிற்சில சமயம்தான் இது சாத்தியப் படக்கூடும் , இன்றைய சூழ்நிலேயில் இது பெரும்பாலும் இயலாததொன்று என்றே சொல்லவேண்டும். எனவே, ஏதாவது ஒரு சரியான முறையை மேற்கொண்டு இதைப் பயனுள்ளதாகச் செய்வது மிகமிக இன்றியமையாத தாகும.

கட்டுரை திருத்தும் வேலே அலுப்பும் அருவருப்பும் தரக்கூடியதாக இருந்தாலும் அதைப் புறக்கணிக்காது பொறுப்பான வேலையாகவே மேற்கொள்ளவேண்டும். பெரும்