பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 431

பாலான பள்ளிகளில் இவ்வேலே புறக்கணிக்கப்பட்டே வருகின்றது. இதற்குப் பல காரணங்கள் உள. சில தலைமையாசிரியர்கள் இவ்வேலையை ஏளனமாகக் கருதி அதனைத் தமக்குப் பிடிக்காத, அல்லது மிக்க பட்டறிவு இல்லாத, ஆசிரியர்கள் தலையில் அளவுக்குமேல் ஒரு சுமையாகக் கட்டுகின்றனர். அல்லது, தமிழாசிரியர்களே தமிழ்க் கட்டுரைகளையெல்லாம் திருத்தவேண்டும் என்ற கொள்கையை மேற்கொண்டு அவர்களேயே திருத்தும்படி ஏவு. கின்றனர். வாரத்திற்கு 200 அல்லது 300 பயிற்சி ஏடு களேத் திருத்தும்படி ஒருவரை ஏவுதல் கடுமையான தண். டனையாகும். இம்முறைகள் விரைவில் மாறவேண்டும். எக்காரணத்தாலும் கட்டுரை திருத்தும் வேலையை ஒருவர் மீது அளவுக்குமேல் சுமத்தக்கூடாது. தமிழ்க் கற்பிக்காது கட்டுரையை மட்டிலும் ஓர் ஆசிரியரைக் கற்பிக்க ஏவுதலாலும் பயன் இராது.

சில பள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு வகுப்புக்கு 12 முதல் 20 கட்டுரைகள் பயிற்சிகளாகத் தருவர். திங்கள் ஒன்றுக்கு இரண்டு எழுத்துக் கட்டுரைகள் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு அதைச் செவ்வனே திருத்தினுல் நலமாக இருக்கும். ஆண்டிற்குப் பன்னிரெண்டு எழுத்துக் கட்டுரைகள் செய்தால் போதும். ஏனேயவை வாய்மொழிக் கட்டுரைகளாக அமையலாம். பல பயிற்சிகளைக் கொடுத்து அவற்றைத் திருத்தாமலிருப்பதைவிட சில பயிற்சி களே எழுதச்செய்து அவற்றை நன்கு திருத்திப் பிழைகளே மாணுக்கர்கட்கு உணர்த்துதல் மேலானது. செய்வன திருந்தச் செய்’ என்பதை ஆசிரியர்கள் செயலில் மேற் கொள்ளவேண்டும். எனவே, கட்டுரையைத் திருத்துவது பற்றி ஒரு சில யோசனைகளைக் கூறுதல் இவ்விடத்தில் பொருந்தும் ; அவை இளம் ஆசிரியர்கட்கு இன்றியமையாதனவுமாகும்.

திருத்துவதுபற்றிய சில குறிப்புக்கள் : கட்டுரை எழுதும் முன்னர் சரியான முறையில் வாய்மொழிக் கட்டுரைப் பயிற்சி தரப்பெறின் பிழைகள் குறையும் ; திருத்தவேண்