பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தமிழ் பயிற்றும் முறை

டிய வேலையும் அதிகமிராது. கூடியவரையில் மானுக்கரின் முன்னிலையில் பிழைகளேத் திருத்துவது நல்லது. எல்லாப் பிழைகளேயும் இங்ங்னம் எடுத்துக்காட்டி திருத்துவதென்பது நடைமுறையில் இயலாததொன்று. மிகப் பெரும் பிழைகளேயாயினும் இவ்வாறு எடுத்துக்காட்டினுல் அதிகப் பயன் வினையும். எல்லாப் பயிற்சிகளையும் மாணுக்கர்களே வைத்துக் கொண்டு திருத்துவதும் இயலாதது. ஒரு வாரத்தில் ஒரு பயிற்சியை ஐந்தாறு மாளுக்கர்களைப் பொறுக்கி வைத்துக் கொண்டு இவ்வாறு திருத்தினுல், எட்டு வாரத்திற்குள் ஒரு வகுப்பு மாளுக்கர்கள் எல்லோரையும் ஒருமுறை உடன் வைத்துக்கொண்டு திருத்த முடியும். ஒரு மானுக்கனின் பிழைகளே அவனேக்கொண்டே வகுப்பில் திருத்தும்படி செய்வது பயனுடைய முறையாக இருக்கும். ஆணுல், பலர் முன்னிலையில் இவ்வாறு சுட்டிக் காட்டுவதை முன் குமரப் பருவ மாணுக்கர்களில் சிலர் விரும்பாதிருத்தல் கூடும் ; அவ்வாறு செய்வதால் அவர்கள் மனம்புழுங்கி புண்பட்டு வருந்தவும் கூடும். அவ்வாறு மனம் பாதிக்கப்படாமல் இம்முறை நடைபெற்ருல் மிகச் சிறந்த பயனே அளிக்கும், எனினும், ஒருவர் தம் குற்றத்தைத் பிறர் முன்னிலையிலோ தனித்தோ உணர்ந்து கொள்வது வாழ்க்கையில் அண்வரும் மேற்கொள்ளத்தக்க தொன்ருதலால், ஆசிரியர் ஆராய்ந்து இம்முறையைக் கையாளலாம். திருத்தும்பொழுது பிழை களே எடுத்துக்காட்டுதல் நல்ல முறையில் அமையவேண்டும்; கற்கும் மாணுக்கர்களும் விரும்பி ஏற்றுத் திருந்த முன் வரும் முறையில் அஃது அமைந்தால் சாலப் பயன்தரும்.

தொடக்கநிலைப் பள்ளி வகுப்புக்களில் விளுக்களுக்குச் சிறு சிறு விடைகளே எழுதவேண்டி யிருப்பதால் எழுதி முடிந்ததும் அவற்றைத் திருத்தி விடலாம். திருத்திக் கொண்டே வகுப்பைச் சுற்றியும் வரலாம். நடுநிலை, உயர் நிலைப் பள்ளி வகுப்புக்களில் அவற்றை ஓய்வு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலுமே திருத்தவேண்டும். சிலர் வகுப்பொழிந்த வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் திருத்தாமல் இருந்துவிட்டு அவற்றை வகுப்புக்குக் கொண்டுவந்து