பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 423

ஒவ்வொருவரையும் தம் பக்கத்தில் வைத்துக்கொண்டு திருத்தும் முறை விரும்பத் தக்கதன்று. இவ்வாறு காலத்தை வீணுக்குதல் கூடாது. இம்முறையால் மாளுக்கர்கள் தனிக் கவனம் பெறுகின்றனர் என்று நினைப்பதும் தவறு. இவ்வாறு திருத்தும்பொழுது எல்லாவற்றையும் திருத்தி எழுதவேண் டிய அவசியமும் இல்லை. சில குறியீடுகளைக் கையாண்டால் ஆசிரியரின் வேலே குறைவதுடன் அவை மாணுக்கரின் சிந்தனையைத் தூண்டுவனவாகவும் இருக்கும். கீழ்க்காணும் குறியீடுகளை மேற்கொள்ளலாம்.

குறி குறிப்பது எ. பி. எழுத்துப் பிழை. A. சொற்கள் விடுபட்டிருப்பதைக்

காட்டுவது. த. ந. தமிழ் நடை நன்ருக இல்லை. இ. பி. இலக்கணப் பிழை t

உயர்வு நவிற்சி அல்லது புனைந்துரை. கருத்தின் உண்மையில் ஐயம். நிறுத்தற்குறியிட்டதில் தவறு. விட்டு விடுக.

வேண்டாதவை.

இடம் விடுக. பத்தியாகத் தொடங்குக. பிழையான நிறுத்தற் குறி. தொடரில் முரண்காணும் இடம். கூறியது கூறியிருக்கும் இடம். இவற்றை மாணுக்கர்கட்கு நன்கு விளக்கிவிட்டால், இக் குறிகளே அறிந்து, காட்டிய திருத்தங்களைத் திருத்தமுடியும். மாளுக்கரின் கட்டுரைகளில் காணப்பெறும் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், சந்திப் பிழைகள், வாக் கியப் பிழைகள் முதலியவற்றை மட்டிலும் திருத்திவிட்டால் போதாது. அவற்றை எடுத்துக்காட்டி தக்க மொழிப் பயிற்சிகளினுல் நீக்க முயலவேண்டும். பொருள் வரிசைப்