பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 தமிழ் பயிற்றும் முறை

பொருத்தத்தில் குறைகள், உணர்ச்சியில் வெளியிடும் மொழிக் குறைகள், பொருளுக்கும் சொல்லுக்கும் பொருத்தம் விளங்காத குறைகள் போன்றவற்றில் ஆசிரியர் நல்ல கவனம் செலுத்தவேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் இவற்றைச் சரியாகக் கவனிப்பதே இல்லை. இவற்றைப் பொதுவாக வகுப்புக்களில் எடுத்துக் காட்டித் திருத்தினுல் நற்பயன் விளையும். பொருளை அழுத்தமாகவும் கோவையாகவும் உணர்ச்சியோடும் வெளியிடும் கட்டுரைகள் சிறு பிழைகளுடன் காணப்படினும், அவை பிழையற்று அமைப்புக் குலைந்து பொருள் மெலிந்து தோன்றும் கட்டுரைகளே விட மேலானவை. எனவே, திருத்தும் ஆசிரியர்கள் உணர்ச்சியைக் கவனிக்கவேண்டும்.

ஒரு வாரத்தில் கொடுத்த எழுத்துக் கட்டுரையை அடுத்த வாரத்திற்குள் திருத்திவிட்டால் நலம் , அந்த வாரத்தில் கட்டுரைப் பாட வேளேயில் அதை மாளுக்கர்களிடம் கொடுத்துவிட வேண்டும். திருத்திய ஆசிரியர் மாணுக்கர்கள் செய்த பிழைகளே வகைப்படுத்தித் தொகுத்து வைத்துக்கொண்டு வகுப்பு மாணுக்கர்கள் அனைவருக்கும் காட்டலாம் : அப் பிழைகளின் திருத்தங்களே உளத்தில் பதியுமாறும் விளக்கலாம். ஒரு சிலர் நன்ருக எழுதிய கட்டுரைகளை அனைவருக்கும் படித்துக் காட்டலாம். அதே பொருள்பற்றிப் புத்தகத்திலுள்ள கட்டுரையைப் படித்தும் காட்டலாம். அதே பாட வேளையில் எல்லோரையும் குறிப்பேட்டின் (Note book) இடப்புறத்தில் திருத்தங்களே எழுதுமாறு ஏவி, அவற்றை முடிக்குமாறு செய்ய வேண்டும். பெரும்பாலும் மாணுக்கர்கள் ஆசிரியர் சிவப்பு மையி ல்ை திருத்தியவற்றைப் பார்ப்பதே இல்லை. இம் முறையைக் கையாண்டால் நல்ல பயன் விளையும். தம்முடைய கட்டுரை வகுப்பில் படிக்கப்படும், ஆராயப்படும் என்ற எண்ணமும் பற்றும் ஒவ்வொருவரும் அறிந்திருந்தால், மானுக்கர்கள் தங்கள் கட்டுரைகளே நன்ருக எழுத முன்வருதல் கூடும்.

சில ஆசிரியர்கள் கட்டுரைகளே மதிப்பிடுவதற்கு ஒரு வகை மதிப்பெண் பாகுபாட்டைக் கையாளுகின்றனர்.