பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. இலக்கியம்

எது இலக்கியம் : இலக்கியம்’ என்னும் பெயருக்குத் தகுதியான புத் தகங்களே அறிஞர்கள்தாம் இயற்ற முடியும். பண்டிருந்தே இலக்கிய ஆசிரியர்கள் பலவகையான சிறப்புக்களையும் அறிவாற்றலேயும் உடையவர்களாக இருந்தனர். எவரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரே யாவர்.

" ஆர்த்தசபை நூற்றெருவர் ஆயிரத்தொன் ரும்புலவர்

வார்த்தை பதின யிரத்தொருவர் '

என்ற வெண்பாப் பகுதியை நோக்குக. இக் காலத்தில் எல்லோரும் புத்தகம் எழுத வேண்டும் என்று விழைகின்றனர்; எழுதவும் செய்கின்றனர். அவர்கள் எழுதிய அனைத்தும் இலக்கியங்களாகா. மனிதனுடைய அறிவிற்குப் பயன்படுபவை எவையோ அவையே இலக்கியங்கள்; நூல்கள். மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும் நூல் என். பதை அறிக இலக்கியத்திற்குத்தான் மனிதனுடைய உள்ளுணர்ச்சியைத் துண்டக்கூடிய ஆற்றல் உண்டு ; மனித வாழ்வுக்கு அரணுக இருந்து பாதுகாக்கக் கூடியதும் அதுவே.

எந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்கவேண்டும் என்ற வேட்கை எழுகின்றதோ அது தான் இலக்கியம் : பன்முறை படித்தாலும் சிறந்த இலக்கியங்கள் படிக்குந்தோறும் புதுப்புதுச் சுவையைத் தோற்றுவிக்கும். ஆயுந் தொறுந்தொறும் இன்பந் தருந்தமிழ் * தேருந் தொறுமினி தாந்தமிழ் என்ற அறிஞர்களின் உள் ளக் கருத்தைச் சிந்தித்துப் பார்த்தால் இவ்வுண்மை

ஒளவையார்-தனிப்பாடல் திரட்டு-பகுதி.க. பக்-119.