பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைப் பயிற்சி 481

ஆகியவற்றை நன்கு வளர்க்கமுடியும். அச்சிதழ்களால் இந்த நன்மைகளே அடைய இயலாது.

குறிப்பிட்ட காலங்களில் இவ்விதழ்கள் வெளி வரு வதற்குச் சுறுசுறுப்பாகச் செயலாற்றும் மாணுக்கர்களடங்கிய குழுக்கள் பணியாற்றவேண்டும் ஒவ்வொரு வகுப்பாசிரியர் களும் திறமையுள்ள மாணுக்கர்களைத் தேர்ந்தெடுத்து செயற் குழு அமைத்து இப் பணியினே மேற்கொள்ளலாம். இக் குழுக்களில், கருத்தில் வல்லவர், எழுத்தில் வல்லவர், ஒவியத்தில் வல்லவர், பதிப்பித்தலில் வல்லவர் ஆகியவர் கள் உறுப்பினர்களாகப் பணியாற்ற வாய்ப்பளித்தால் இதழ் கள் மிகச் சீரிய முறையில் வெளிவரும். வெளியில் உலவக் கூடிய அச்சிதழை வெளியிடுவதற்கு ஒரு தனிச் செயற்குழு வேண்டும். இதில் இத் துறையில் அனுபவமுள்ள விரும் பிப் பணியேற்கும் ஆசிரியர்களும், திறமையுள்ள ஒரு சில மானுக்கர்களும் உறுப்பினர்களாக இருந்து பணியாற்ற லாம். இதல்ை புதிய தாய்மொழிப் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பெற்றுள்ள கட்டுரைகளைப் பொருளுக் கேற்ற வாறு பிரிவினை செய்து தொகுத்தல், உள்ளுறை தயாரித்தல், அட்டவணை தயாரித்தல், பின்னிணைப்புக்கள் தயாரித்தல், அச்சுப் பிழைத்திருத்தம் செய்தல், எழுத்தோவியங் களுக்கும் ஏனைய ஓவியங்களுக்கும் ஏற்ற தலைப்புக்களே அமைத்தல், கட்டுரைகளின் உட் பிரிவுகளுக்குத் தலைப்புக் களேத் தருதல், கட்டுரை - கதைகளை ஒரு சில வாக்கியங்களால் திறய்ைதல், புத்தகத்திறனுய்வு செய்தல், ஏற்ற இடங்களில் நிறுத்தற் குறிகளே இடுதல் போன்ற எண்ணற்ற துறைகளில் மாணுக்கர்களுக்கு நல்ல பயிற்சியினே அளிக் கலாம். இதற்காகச் செலவிடப்பெறும் நேரம் மொழி கற் பிக்கும் துறையில் சிறந்த பலனைத் தரும். அருஞ்சொற் களுக்குப் பொருள் கூறுதல், சொல்லிலக்கணம் கூறுதல், சந்தி பிரித்துச் சொல்லுதல், செய்யுட்களே அன்வயப் படுத்திப் பதவுரை, பொழிப்புரை கூறுதல் ஆகியவற்றில் மட்டிலும் கவனம் செலுத்திச் செலவிடும் நேரத்தில் எதிர் பார்க்கும் பலனேவிடப் பன்மடங்கு அதிகமாகவே இது பலன் அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.