பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 தமிழ் பயிற்றும் முறை

காரும் மின்னும்

யமுனையெனும் திருநதியும் எகினப்பேடும்’

கணங்குழைய கோசலை தேவகி யசோதை

கண்மணியும் பாவையும் போல் '

என்ற தொடர்களில் தனித்தனி அழுத்தம் கொடுத்துச் சொற்களே நன்ருகப் பிரித்துப் படித்தால் கவிஞன் பாடலில் காட்டும் காட்சியை ஒருவாறு உணரக் கூடும். வேண்டுமானுல் மணங்கமழ் பூவை, தமாலம், வெற்பு, துகிர், கார், எகினம் போன்ற சொற்களின் பொருளேத் தெரிவித்துப் பாட்டை மீட்டும் இசையுடன் பாடினுல் பாட்டில் வருணிக்கப்படும் காட்சி மனத்தில் நன்கு படியும். சாதாரண மக்களும் கவிதையை அனுபவிக்குமாறு ரசிகமணி டி. கே. சி. அவர்கள் இவ்வாறுதான் விளக்குவார்கள். இத்தகைய பாடல்களே என் அரிய நண்பர் உலக ஊழியஞர் போன்றவர்கள் செய்வதுபோல் இசையூட்டி விளக்கம் செய்தால் மாளுக்கர்கள் நன்கு சுவைப்பர்.

சிலசமயம் புறநானூற்றுப் பாடல்கள் போன்றவற்றில் வரும் சொற்கள் மிகக் கடினமாக இருக்கும். அம்மாதிரிப் பாடல்கள் வகுப்பு நிலைக்கு அப்பாற்பட்டவை. அவற்றைத் 355 fursor (popurse;brsār (Exceptional treatment) விளக்கவேண்டும். அத்தகைய பாடல்களைக் கற்பிக்கும்பொழுது பாடத்தின் தொடக்கத்திலாயினும் பாடலேப்படிக்கும்பொழுதாயினும் சொற்களின் பொருளைத் தனியாக எடுத்துச் சொல்லித்தான் ஆகவேண்டும். இன்னும் சில சமயங்களில் பாடலைப் புரிந்து கொள்ளுவான் வேண்டி கதைச் சுருக்கத்தையோ நிகழ்ச்சியின் சுருக்கத்தையோ கூறிப் பாடல்கள் படிக்கப்பெறும். கம்பர், வில்லிபுத்துரார் போன்ற சில பெருங் கவிஞர்களின் பாடல்களே இவ்வாறு தான் கையாளவேண்டும். தொடக்கத்தில் சிறு விளக்கம் தரப்பெருவிட்டால் இப்பாடல்களைப் புரிந்து கொள்வது

- ** தற்சமயம் அண்ஞமல்ப் பல்கலைக் கழகத் தமிழ் விரி வுரையாளராகப் பணியாற்றி வருபவர்.