பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 481

இன்னுேசையும் பொருட் செறியும் உளக்கனிவும் பொதிந்த கவிதைகள், நல்லணிகள் செறிந்து விளங்கும் பாடல்கள் முதலியவற்றை இளம்பருவத்தில் நெட்டுருச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கலாம். மாணுக்கர்களின் மனத்தைக் கவரக்கூடிய பாடல்களைத் தொகுத்துவைக்கும் பழக்கத்தை வளர்த்து விட்டால், அவர்கள் தம் பாடப்புத்தகத்தில் வருவனவற்றையும் பிற இலக்கியங்கள், பருவ இதழ்கள், நாளிதழ்கள் முதலியவற்றில் காணப்படுபவைகளுள் தம் மனத்தை ஈர்க்கக் கூடியவற்றையும் தொகுத்து வைத்துக் கொள்வர். இவ்வாறு செய்யாது தேர்வைக் கருதி எல்லோரையும் ஒரு குறிப்பிட்ட பகுதியை நெட்டுருச் செய்யும்படி வற்புறுத்துவது நன்றன்று; தேர்விளுல் பா நயக்கும் பண்பை அளந்தறிய எண்ணுவதும் சரியன்று ; அஃது இயலாதது மாகும்.

கவிதை கற்பிப்பதில் வேண்டுபவை: எந்தப் பாடம் கற்பிக்கப்பெற்ருலும் ஏற்ற இடங்களில் ஏற்ற பாடல்களை இடத்திற்கேற்றவாறு ஏற்ற இன்னுேசையோடு எடுத்தல் படுத்தல் நலிதல்களால் குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் படித்துக்காட்டி மாணுக்கர்களின் சுவையுணர் ஆற்றலை வளர்க்கலாம். மானுக்கர்களின் விருப்பத்தையொட்டி அவர்கள் மனம்போனவாறு சந்தம் கொழிக்கும் பாடல்களைப் பாடத் துாண்டிப் பின்னர் யாப்புக்குக் கட்டுப்பட்ட பா வகைகளையும் படைக்க வழி கோலலாம். தமக்கு விருப்பமான பாடல்களை ஒரு தனிக் குறிப்பேட்டில் தொகுத்து வைத்துக் கொள்ளுமாறு தூண்டலாம்.' நாம் தேர்ந்தெடுக் கும் பாடல்களுக்கேற்ற வண்ணப் படங்களை வரையத் தூண்டலாம்; அல்லது அச்சில் வெளிவந்துள்ள படங்களைக் கத்திரித்து ஒட்டிவைத்துக் கொள்ளுமாறு வழிகாட்டலாம். இளம் மானக்கர்கட்குக் கதைப் பாடல்களே நடித்துக் காட்டும் வாய்ப்புக்களே நல்கலாம். ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்றதொரு கவிதை நூலைத் தொகுக்கும்படி வழிகாட்

8.9 சுப்புரெட்டியார், ந: கவிதையனுபவம்-பக்கம் (38689) பார்க்க.

த-32