பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 தமிழ் பயிற்றும் முறை

தேர்வாதலால் அவ்வாறு செய்யப்பட்டுள்ளது ; பள்ளிகளே நடத்தும் தேர்வுகளில் இம்மாதிரி ஆசிரியர் விரும்பும் பகுதிகளை நெட்டுருச் செய்யும்படி வற்புறுத்துதல் விரும்பத் தக்கதன்று. தாம் படிக்கும் பகுதிகளில் நல்லனவற்றை மட்டிலும்-தாம் விரும்பும் அல்லது தம் மனத்தைக் கவரும் பகுதிகளே மட்டிலும்-தெட்டுருச் செய்தால் போதுமானது. ஆசிரியர் தாம் கற்பிக்கும் பகுதிகளிலுள்ள பல்வேறு சுவைகளே எடுத்துக் காட்டினல், மாணுக்கர்களே நெட்டுருச் செய்யவேண்டிய பகுதிகளேத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவர். நமக்கு எல்லாப் பகுதிகளும் பிடிப்பதில்லை; அதுபோலத் தானே மாணுக்கர்கட்கும் இருக்கும்? நெட்டுருச் செய்ய வேண்டிய பகுதிகள் வெறுப்பும் சலிப்பும் தராமல் விருப்பும் பற்றும் ஊட்டக் கூடியனவாக இருந்தால், மாணுக்கர்களைக் கட்டாயப்படுத்துதல் அவசியம் இல்லை. குருட்டுத்தனமாக நெட்டுருச் செய்வதால் பயன் ஒன்றும் விள யாது ; பொருள் விளக்கத்துடன் மனப்பாடம் செய்தால்தான் அப்பகுதிகள் மாளுக்கரின் மனத்தில் நிலத்து நிற்கும். முழுப்பகுதிகளாக நெட்டுருச் செய்தல் சிறந்தது; நீண்ட பகுதியாக இருந்தால், அதைக் கருத்து முற்றுப்பெற்ற சிறுசிறு பகுதி களாகப் பிரித்துக்கொண்டு நெட்டுருச் செய்ய வழி காட்டலாம். நெட்டுருச் செய்தலில் உள்ள உளவியல் உண்மைகளே அறிஞர் நூல்களில் கண்டு தெளிக.

நெட்டுருச் செய்ய வேண்டிய பகுதிகள் மாணுக்கர்களுடைய ஒழுக்கம், உளப்பண்பு, கற்பனையாற்றல், கருத்து வளம், முருகுணர்ச்சி முதலியவற்றை வளர்க்கத் தக்கனவாக இருத்தல் வேண்டும். மலே, கடல், நாடு, வள நகர், பருவம், இரு சுடர் தோற்றம் முதலியவற்றை வருணித்துக்கூறும் பகுதிகள், ஒழுக்கத்தை ஊட்டவல்ல பகுதிகள், சொல் நயம் பொருள் நயம் செறிந்த பாடல்கள், மொழியின் சிறப்பு, நாட்டு வாழ்த்து, கடவுள் வாழ்த்து ஆகியவற்றைக் கூறும்

  • சுப்புரெட்டியார், ந : கல்வி உளவியல்-பக் (256-264); எஸ். வாசன் கம்பெனி, சென்னை-4. கவிதையனுபவம் - பக் (369-374) கழக வெளியீடு பார்க்க.