பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 488

வான நூல்கள் ஆகியவை யாவும் கவிதை வடிவிலேயே எழுந்துள்ளன. உரையாசிரியர்கள் காலத்தில் உரைநடைஅரும்பி, ஐரோப்பியர் வருகையால் போதாகி, அச்சுப்பொறி வளர்ச்சியால் மலர்ந்து, நவீன வாழ்க்கைத் தேவைகளை ஒட்டி மணம் வீசத் தொடங்கி விட்டது. இன்னும் இத் துறையில் அதிகமான உரைநடை நூல்கள் தோன்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பண்டைத் தமிழர்கள் உரைநடை நூல்களே எழுதாததற்குக் காரணம் என்ன என்பதை ஓரளவு அறிந்து கொள்ளல்வேண்டும். இக்காலத்தில் உள்ளவை போன்ற எழுது கருவிகளும் பிற சாதனங்களும் அக்காலத்தில் இல்லை. பனையேடுகளையும் இருப்பு எழுத்தாணியையும் தவிர ஏனைய எழுது கருவிகளே அக்காலத்தில் காணமுடியாது. பனேயேடுகளில் எழுத்தாணியால் எழுதுவது எளிதான காரியமன்று. ஆகவே, பண்டையோர் எழுத்துவேலையை எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவும் குறைக்க வேண்டியவர்களா யிருந்தனர். எனவே, 'சுருங்கச் சொல்லல்’ என்னும் முறையை மேற்கொள்ள வேண்டியவர்களாயினர் ; உரைநடையில் கூறவேண்டிய வற்றையும் பா நடையிலேயே கூறினர். அக்காலத் தில் உரைநடை வளராததற்கு இன்னுெரு காரணமும் உண்டு. அச்சுப்பொறியும் அச்சுப் புத்தகங்களும் இல்லாக் குறையால் நூல்களைக் கற்கும் மாணுக்கர்கள் தாம் கற்க வேண்டிய அனைத்தையும் மனப்பாடம் செய்யவேண்டி யிருந்தது. கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நெட்டுருச் செய்ய வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டிருந்தது. எனவே, மனப்பாடம் செய்வதற்கேற்ற பா நடையை மேற்கொண்டு உரைநடையைக் கைவிட்டனர். இக் காரணம்பற்றியே சில உரையாசிரியர்களும் சில விடங்களில் இதனை வல்லார்வாய்க் கேட்டுணர்க’ என எழுதிப் போந்தனர்.

பண்டை நாளில் தமிழ் மொழியில் உரைநடை நூல்கள் தோன்றியிருக்குமேயானல் இன்றைய தமிழ் நாடு பல துறைகளிலும் முன்னேற்ற மடைந்திருக்கக்