பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 தமிழ் பயிற்றும் முறை

மொழிப் பயிற்சிகளே ஆயத்தம் செய்வதில் அவர்கள் அதிகக் காலம் செலவிட நேரிடும்.

பள்ளிகளில் இலக்கணம் வெறுக்கப் படுவதேன் : பள்ளி. களில் மாணுக்கர்கள் பயிலும் பாடங்களுள் மாணுக்கர்கட்கு அதிக அருவருப்பையும் அச்சத்தையும் தருவது இலக்கணப் பாடமேயாகும். இன்று பெரும்பாலும் இலக்கணம் மானுக்கர் காதில் புகாத உலக்கையாகவே காட்சியளிக்கின்றது; புலவர் வகுப்பு போன்ற மேல் வகுப்புக்களிலும் மாணுக்கர்கள் இலக்கணத்தைச் சிம்ம சொப்பனமாகவே கொள்ளுகின்றனர்; நடை முறையில் அதை இன்றியமையாததாகக் கருதுவதில்லை. இந்நிலைக்குக் காரணம் என்ன ?

மாளுக்கர்கள் இலக்கணத்தை வெறுப்பதற்கு இலக்கணம் காரணமன்று : மாணுக்கர்களின் அறிவு நிஜலயும் காரணமன்று. கற்பிக்கும் ஆசிரியர்களே காரணம் என்று கூறவேண்டும். இலக்கணம் கற்பிப்பதில் சுவையற்ற முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலக்கணத்தை எதற்காகக் கற்கின்ருேம் என்பதை அறியாமல் மாளுக்கர். கள் கற்கின்றனர் ; கற்பிக்கும் ஆசிரியர்களும் இலக்கணம் கற்றலின் நோக்கத்தை எடுத்துக்காட்டுக்களால் விளக்கி அதன் இன்றியமையாமையை அவர்கட்கு உணர்த்துவ தில்லை. எய்தவனிருக்க அம்பை நோவதால் பயன் என்ன? கொய்னு மருந்தைச் சருக்கரைப் பாகில் தோய்த்து நோயாளிகட்குச் செலுத்துவதுபோல இலக்கணத்தை அனுபவ முறையில் இலக்கியப் பாடத்துடன் இணைத்துக் கற்பித்தால், மாணுக்கர்கள் கட்டாயம் இலக்கணத்தை விரும்புவர். நல்ல முறையில் கற்பித்தால் ஏனேய பாடங்களைக் கற்பதில் பெறும் இன்பத்தைவிட இலக்கணப் பாடத்தைக் கற்பதில் அதிக இன்பத்தையும் பெறுவர். கற்கும் நோக்கத்தை விளக்காது, கட்டாயமாகக் கற்பிப்பதால்தான் மாணுக்கர்க்கு இலக்கணம் மிகவும் கசப்பாக இருக்கின்றது ; அதை ஒரு தலைவலியாகவே அவர்கள் கருதுகின்றனர்.