உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 505

வினப்பெயர்கள், ஆகுபெயர், வினையால8ணயும் பெயர், தொழிற்பெயர் முதலிய பெயர் வகைகளையும்; செய்வினை, செயப்பாட்டு வினே, தன்வினை, பிறவினை, ஏவல், வியங்கோள், செய்யும் என்னும் வினைமுற்று முதலிய வினைமுற்று வகைகளையும்; பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் போன்ற பகுபத உறுப்புக்களைப்பற்றியும்; இடை உரிச் சொற்களைப்பற்றியும்; புணர்ச்சி இலக்கணத்தில் இன்றியமையாத சில கருத்துக்களைப்பற்றியும்; அடிக்கடிப் பயின்றுவரும் உவமை, உருவகம், தன்மை, உயர்வு நவிற்சி முதலிய அணிவகைகளைப்பற்றியும் ஓரளவு அறியுமாறு செய்யலாம். இத்துறையில் எந்த அளவு செல்லவேண்டும் என்பதை ஆசிரியர் அனுபவத்தில்தான் கண்டு கொள்ளமுடியும். மாணுக்கர்களின் பட்டறிவிற்குப் பொருந்தாத பல இலக்கணக் குறியீடுகளைச் சொல்லி அவர்களே வெருட்டக் கூடாது. ஆனால், அடிக்கடிப் பயன்படும் தன்வினே, பிறഖിങ്ക്, செய்வினே, செயப்பாட்டுவினை, வினேயால8ணயும் பெயர், தொழிற் பெயர், எச்சம் முதலிய குறியீடுகளே அறிந்து கொள்வதைத் தவிர்க்க முடியாது. அவைகளைக் கட்டாயம் தெரிந்துதான் ஆகவேண்டும்.

பயிற்று முறை : நடுநிலை வகுப்புக்களில் பெரும்பாலும் விதிவருவித்தல் முறையிலேயே இலக்கணத்தைக் கற்பிக்க வேண்டும். விதிவருவித்தல் முறை என்பது, மாணுக்கர்கட்குப் பல எடுத்துக் காட்டுக்களைத் தந்து அவற்றிலிருந்து அவர்களாகவே ஒரு பொது விதியைக் கண்டறியச் செய்தலாகும். தாமாகக் கண்டறிந்த விதிகளே அவர்கள் மறக்கவே இயலாது. இதல்ை மாணுக்கர்களுடைய சிந்தனே ஆற்றல் வளர்வதுடன் விதிகளின் கருத்தும் நன்கு மனத்தில் பதியும். இவ்வாறு கண்டறிந்த விதியை மேலும் சில எடுத்துக் காட்டுக்களுடன் பொருத்திக் கற்றல் இன்னும் இக்கருத்து நன்கு வலியுறும். எடுத்துக்காட்டாக விதிவருவித்தல் முறைப்படி ஆகுபெயரையும் அதன் வகைகளையும் மூன்ரும் படிவ மானுக்கர்களுக்கு எவ்வாறு கற்பிப்பது என்பதை ஒரு சிறிது ஈண்டு நோக்குவோம்.