பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 23

கவனத்தைப் பாடத்தில் நிலைநிறுத்தலாம் ? உடற் சோர்வைப் போலவே மனச்சோர்வும் உண்டு என்பன போன்றவற்றைத் தம் உள்ளத்தில் அமைத்து அவற்றிற் கேற்றவாறு கற்பித்தலே மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

தாய்மொழியைக் கற்பதற்கும், வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை அடிக்கடி மாணுக்கர்கள் உணரும்படி செய்தல் வேண்டும். ஏனய ஆசிரியர்களைப் போலவே செயல்கள் மூலமும் தாம் கற்பித்தலே மேற்கொள்ளலாம். அன்ருட வாழ்க்கையையும் குழந்தைகள் வாழும் சூழ்நிலையையும் நன்கு கவனித்தால் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்குத் துணை செய்யும் ; அவற்றைப் பயனுள்ள வாறு அமைத்துக் கொள்வதில்தான் ஆசிரியர்களின் திறன் இருக்கின்றது. பள்ளி நிகழ்ச்சிகளிலெல்லாம் பங்கெடுத்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இவை யாவும் எளிதில் தோன்றுபவையே. இன்று எத்தனையோ தாய்மொழியாசிரியர்கள் கரும் பலகையைக்கூடச் சரியாகப் பயன்படுத்துவதில்லை. கடின சொற்களுக்குப் பொருள் எழுதுதல், இலக்கண விதிகளுக்கு எடுத்துக்காட்டுக்கள் தருதல், சில பொருள்களைப் படம்போட்டு விளக்குதல் ஆகியவற்றிற்குக் கரும்பலகையைப் பயன்படுத்தலாம். கற்பித்தலில் கரும்பலகையைவிடச் சிறந்ததோர் துணைக்கருவி இல்லை என்று கூடச் சொல்லும்படி அது பயன்படுகின்றது. கவனக் குறைவுள்ள மாளுக்கர்கள், கேள்வி உணர்ச்சி குன்றியுள்ள மாளுக் கர்கள் ஆகியவர்களுக்குக் கரும்பலகைச் சாதனம் சிறந்த துணையாக இருக்கும் என்பதை அனுபவத்தால் அறியலாம்.

தாய்மொழியாசிரியர்களும் ஏனைய ஆசிரியர்களைப்போலவே நின்றுகொண்டு கற்பித்தல் வேண்டும். நின்றுகொண்டு கற்பித்தல் மாணுக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயுள்ள கண்ணுல் காணமுடியாத மானசீக உறவை நன்கு வளர்க்கும். அமர்ந்து கற்பித்தால் அடிக்கடிக்கரும் பலகையைப் பயன்படுத்துதல், படங்களையும் ஏனைய துணைக் கருவிகளேயும் திறனுடன் கையாளுதல் போன்றவற்றை