பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 517

இரண்டு அல்லது இரண்டற்கு மேற்பட்ட மொழிகள் உறவு கொள்ளும்பொழுது அவற்றிலுள்ள சில சொற்கள் கட்டாயம் கலக்கத் தான் செய்யும் ; கலப்பதுதான் இயல்பு என்பதை எவரும் அறிவர். இந்த உண்மையின் காரணமாகத் தான் சில மொழியியலறிஞர்கள் கலப்பற்ற மொழியே உலகில் இல்லை என்று துணிவாகவும் கூறுகின்றனர். மக்கள் உறவு முக்கியமாக வாணிகம் காரணமாகவும், அரசியல் காரணமாகவும், நாடு வளங்காணும் காரணமாகவும், கலைச் செல்வங்களே நுகரும் எண்ணத்தால் மேற்கொள்ளப்பெறும் பயணத்தின் காரணமாகவும், பிறவற்றின் காரணமாகவும் நடைபெறுகின்றது. இங்ங்ணம் மக்கள் உறவு கொள்ளும்பொழுது அவர்தம் பழக்க வழக்கங்களும், நடையுடைய பாவனைகளும், எண்ணங்களும் அரசியற் கொள்கை களும், சமயக் கொள்கைகளும், கலைகளும் கலக்கின்றன. இவை கலப்பதற்கு மொழி கருவியாக இருப்பதால் ஒரு மொழியின் சொற்கள் பிறமொழியில் புகவும், பிறமொழிகளின் சொற்கள். இம்மொழியில் வந்தேறவும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. இங்ங்னம் மொழிகள் கலக்கும் காரணங்களே ஒவ்வொன்ருகச் சிறிது ஆராய்வோம்.

வாணிகம் : மிகப் பழங்காலந்தொட்டே தமிழ் நாடு கிரேக்க நாடு, இத்தாலி, எகிப்து, அரேபியா முதலிய நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கிரேக் கரும் உரோமானியரும் தன்மை அயோனியர் ’ என்பர்; அயோனியர் யவனர் எனத் திரிந்து இலக்கியங்களில் வழங்கப்படுகின்றது. -

  • யவனர், நன் கலந் தந்த தன் கமழ் தேறல் பொன் செய் புனை கலந் தேந்தி நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப ’**

என்ற அடிகளில் யவனர்' என்ற சொல் வழங்கப்படுவதை அறிக. யவனரைச் சோனகர்’ என்று குறிப்பர் நச்சினர்க்கினியர். இந்த யவனர் தமிழ்நாட்டில் வாயில் காவலராக

12 புறம்-56.