பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 学 3 *

சிந்தனையின் விளைவாகத் தோன்றிய விளுக்களை மாற்றி யமைக்கவேண்டிய இன்றியமையாமை இராது. நல்ல முறையில் வினுக்களேத் தயாரித்தற்குக் காலச் செலவும் சிந்தனையும் வேண்டும் ; மாளுக்கர்களின் விடைகளே ஏற்ற முறையில் பயன்படுத்த அனுபவம் வேண்டும். முன்ஆயத்தமின்றி வகுப்பிற்குச் செல்லும் மொழியாசிரியர்கள் இத்துறையில் வெற்றிகாண முடியாது. வினுக்களைத் தயாரித்தல் ஏனைய ஆசிரியர்களைவிட மொழியாசிரியர். களுக்கு மிகவும் முக்கியமானது. மொழித்துறையில் வினுக்களே ஆயத்தம் செய்தல் எளிதன்று.

இதிலிருந்து தாய்மொழியாசிரியர்கள் வகுப்பிற்குச் செல்லுவதற்குமுன் முன்-ஆயத்தம் செய்யவேண்டியதன் இன்றியமையாமை தெளிவாகின்றது. பிற பாடங்களைப் பயிற்றும் ஆசிரியர்கள் முன்-ஆயத்தம் செய்கின்றனரா என்பது வேறு விஷயம்; ஆனல் அவர்கள் முன்-ஆயத் தத்தின் இன்றியமையாமையை மறுப்பதில்லை. ஆனல், தாய் மொழியாசிரியர்களுக்கு முன்-ஆயத்தம் செய்தல் என்பது புதிய துறை. அவர்கள் பாடபுத்தகங்களுக்குத்தான் முக்கியத்துவத்தை அளிக்கின்றனர்; புத்தகத்தில் உள்ளவற்றைத் தான் மாணுக்கர் மனத்தில் திணிப்பது என்று கருதுகின்றனர். கற்பிக்கும் நேரத்தை யெல்லாம் அந்தக் கைங்கரியத்தில்தான்’ செலவிடுகின்றனர். அன்ருட வாழ்க்கையில் மொழி எவ்வெவ்வாறு பயன்படுகின்றது என்பதைத் தாய்மொழியாசிரியர்கள் சிந்தித்துப் பார்த்தால், தாம் கற்பிக்கும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்வர் ; மாணுக்கர்களின் மனநிலைக் கேற்றவாறு எவ்வெவ்வாறு முன்-ஆயத்தம் செய்யப் பெறுதல் வேண்டும் என்பதையும் அறிவர். -

இவற்றைத் தவிர மொழிபயிற்றுதற்கெனச் சிறப்பான சில விதிகள் உள்ளன. அவற்றைத் தாய்மொழியாசிரியர்கள் நன்கு அறிந்திருக்கவேண்டும். அவர்கள் மொழி கற்பிப்பதன் சிறப்பான நோக்கங்களைப் பரிசீலனை செய்ய வேண்டும். பேச்சு, ஒப்புவித்தல், வாய்விட்டுப் படித்தல்,