பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #2 தமிழ் பயிற்றும் முறை

கண்ணுேட்டமாகப் படித்தல், பொருளுணர்தல், (Comprehension), சொற்களஞ்சியப்பேறு, எழுதுதல், படைப்பாற்றல் போன்ற மொழித் திறன்களைப் பரிசீலனை செய்ய வேண்டும். செய்யுள், உரைநடை என்ற இருவேறு மொழி வடிவங்களைப் பாகுபாடு செய்து அவற்றை மொழி கற்பிப்பதன் நோக்கத்திற்கேற்ப எவ்வெவ்வாறு கற்பிக்க வேண்டும் என்ற முறைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

உயர்நிலைப்பள்ளிகளில் மொழி கற்பித்தலை மேற்கொண்டு பணியாற்றிவரும் தாய்மொழியாசிரியர்கள் தொடக்க நிலைப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய விதிகளையும் முறைகளையும் கையாளவேண்டிய வாய்ப்புக்களைப் பெறுவதில்லை. மாணுக்கர்கள் தொடக்கநிலைப் பள்ளிகளில் ஐந்தாண்டு மொழிப்பயிற்சி பெற்று முதற்படிவத்தில் வந்து சேர்கின்றனர். இம்மாளுக்கர்கள் உரை நடையைச் வாய்விட்டுப் படிக்கவும், சாதாரண செய்யுட்களைத் தடை யின்றி விரைவாகப் படிக்கவும் பயிற்சி பெற்றிருப்பதுடன் கண்ணுேட்டமாகப் படிப்பதிலும் ஒரளவு பயிற்சி பெற்றிருப்பர். இப் பயிற்சி குழந்தைகளின் தனிப்பட்ட திறமை, அவர்கள் வாழும் சூழ்நிலை, பெற்ற பயிற்சி முதலிய வற்றிற்கேற்ப மாறுபடும். குழந்தை இலக்கியங்களே எளிதில் பெற்றுப் படித்துப் பயிற்சியடைந்த நகர்ப்புறச் சிறுவர்கள் அவ்வித இலக்கிய வசதிகளே ப் பெறமுடியாத நாட்டுப்புறச் சிறுவர்களே விட அதிகத்திறமையுடனிருப்பர். இவற்றையெல்லாம் தாய்மொழியாசிரியர்கள் நன்கு அறிந்து தம் பயிற்றும் முறையை ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். அங்ங்ணம் மாற்றியமைத்துக் கொள்ளா விடில் எல்லா மானுக்கர்களும் தாம் எதிர்பார்க்கும் அளவு மொழியறிவு பெற முடியாது. 所

இன்றைய நிலையில் பட்டதாரிகள் தமிழை நன்கு பயின்று தாய்மொழியாசிரியர்களாகப் பணியாற்ற முன் வந்தால், தமிழ்ப் பயிற்றும் முறை பல துறைகளில் விரிவடையும். ஆனால், பட்டதாரிகள் இன்று தமிழ்பயிற்று முறையை விருப்பப்பாடமாக எடுத்துக்கொண்