பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலேத் திட்டங்கள் 539

விவரம் குறிப்பிடப் பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பாகங்களில் பல மண்டல மொழிகளின் வளர்ச்சியிலுைம் அவ் விடங்களில் அவை பேசப்பட்டு வருவதாலும் நாடு முழுவதும் மொழிப் படிப்பைக் குறித்து ஒரே விதமான திட்டத்தை வரையறை செய்வது நடைமுறைக்குப் பொருந்துவதன்று; அன்றியும், அது விரும்பத்தக்கதும் அன்று.

உயர்நிலைக் கல்வித் திட்டம் இன்றைய நிலையில் ஒரு மாளுக்கன் கற்கவேண்டிய மொழிகளைப்பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அவையாவன : (1) தாய்மொசி; (2) தாய்மொழி கற்க வாய்ப்பில்லாத இடத்து மண்டல் மொழி (மாநில மொழி); (3) ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பெற்ற மொழி; (4) வடமொழி, அறபு, பாரசீகம், இலத்தின் முதலிய கலை மொழிகள், (5) உலக மொழியான ஆங்கிலமொழி. மண்டல மொழியும் தாய்மொழியும் ஒன்ருக இருக்கும் பகுதிகளில் மாளுகீகர்கள் கற்க வேண்டிய் மொழிகள் நான்கு; மண்டல மொழியும், தாய்மொழியும் ஆட்சி மொழியும் ஒரே மொழியாக இருக்கும் பகுதிகளிலுள்ள மாணுக்கர்கள் மூன்று மொழிகளைத்தான் கற்கவேண்டியவர்களாகின்றனர். இன்று இந்திய அரசாங் கம் இந்தி மொழியை ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்திய அரசியல் திட்டத்திலும் அது குறிப்பிடப் பெற்றுள்ளது. அன்றியும், அரசியல் திட்டம் தோன்றிப் பதினேந்து ஆண்டுகள் வரையில் ஆங்கிலம் அரசியல் மொழியாக இருக்குமென்றும் அரசியல் திட்டம் குறிப்பிடுகின்றது. இன்று இந்தி வழங்காத பகுதிகளிலுள்ளோர் ஆங்கிலத்தையும் இன ஆட்சிமொழியாகக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி வருகின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் நமது மாநிலத்தில் குழந்தைகள் மூன்று மொழிகளைக் கட்டாயம் கற்கவேண்டியவர்களாகின்றனர். மூன்று மொழிகளைக் கற்றல் கடினந்தான்; நம்

  • Report of the Secondary Education Commission பக்கம் 62-78.