பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

南4G தமிழ் பயிற்றும் முறை

நாட்டில் இதனைத் தவிர்க்க முடியாது. ஒரளவு தாய்மொழி அறிவுபெற்று தொடக்கநிலைப் பள்ளியிலிருந்து வெளியேறும் மாணுக்கர்கள் நடுநிலைப் பள்ளிகளில் நுழைந்தவுடன் ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளேச் சேர்ந்தாற் போல் புதிதாகக் கற்கவேண்டிய நிலையிலுள்ளனர். ஆளுல், உயர்நிலைக் கல்வித் திட்ட அறிக்கை இந்திலேயை நன்கு ஆராய்ந்து ஓராண்டில் இரண்டு புதிய மொழிகள் கற்பித்தலைத் தவிர்க்கவேண்டுமென்றும், ஒன்றை முதல் ஆண்டி லும் மற்ருென்றை அடுத்த ஆண்டிலும் நுழைத்தால் நல்ல பயன்தரும் என்றும் கருதுகின்றது.”

இனி, தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலைக் கல்வித் திட்டங்களில் அமைந்துள்ள தாய்மொழிப் பாடத் திட்டங். களேப்பற்றி ஒவ்வொரு தாய்மொழியாசிரியரும் அறிந்து கொள்ள வேண்டும். நடைமுறையிலுள்ள திட்டங்களைக் குறித்து ஈண்டு ஒருசிறிது ஆராய்வோம்.

தமிழ்ப் பாடத்திட்டங்கள்

வாழ்க்கைக்கே உயிர் நாடியாக இருக்கும் தாய். மொழிக்குக் கல்வித் திட்டத்தில் முதல் இடம் அளிக்கப்பெற வேண்டும் என்று வலியுறுத்தத் தேவையில்லே. சரியாகப் பேசுதல், சரியாகப் படித்தல், சரியாக எழுதுதல் ஆகிய மூன்றும் பயன்படாத வாழ்க்கைத் துறைகளே இல்லை. இவை மூன்றும் அன்ருட வாழ்க்கையில் அடிக்கடிப் பயன்படும் செயல்கள். இம்மூன்று செயல்களும் சிறந்த முறையில் ஒரு குழந்தை அடைவதற் கேற்றவாறு பாடத்திட்டங்கள் அமை தல்வேண்டும். இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு தான் தொடக்கநிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளின் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. தாய்மொழி (மண்டல் மொழி) பற்றிய பாடத் திட்டங்களின் முக்கிய கூறுகளைப்பற்றித் தாய்மொழியாசிரியர்கள் அவசியம்

  • Roport of the Secondary Education Commission பக்கம் 77.