பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலேத் திட்டங்கள் 54 h

அறிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஆசிரியரின் கையி லும் அரசினர் வெளியிட்டுள்ள இம்மூன்றுநிலைப் பாடத் திட்டங்களும் இருத்தல் வேண்டும். அவற்றை அவர்கள் நன்கு ஆராய்ந்து, பாடத் திட்டங்களின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும்.

தொடக்கப் பள்ளிகளின் தமிழ்ப்பாடத் திட்டம் : ஒரு காலத்தில் கீறல் போடும் தற்குறித் தன்மையை நீக்குவதே தொடக்கநிலைப்பள்ளிகளின் முக்கிய நோக்கமாக இருந்தது. பின்னர் கையெழுத்துப் போடும் படிப்பறிவும் எழுத்தறிவும் போதாதென்ற எண்ணம் தோன்றியது. கடிதங்கள் எழுதவும், வந்த கடிதங்களைப் படித்துக் கருத்துணரவும் போதிய திறமையளிப்பதே தொடக்கநிலைக் கல்வியின் முக்கிய நோக்கம் என்று கருதலாயினர். இன்று அந்நில மாறிவிட்டது. அன்ருட வாழ்க்கை நடத்துலுதற்கு அந்த மொழியறிவும் போதாதென்று அறிஞர்கள் உணர்ந்துள். ளனர். நாள்தோறும் வெளிவரும் நாளிதழ்களைப் படித்து உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்வதற்குத் தேவையான மொழியறிவைப் பெறும்படி செய்வதே தொடக்கநிலைப்பள்ளிகளில் தாய்மொழியைக் கற்பிப்பதன் நோக்கமென்று ஒப்புக்கொள்ளப்பெற்றுள்ளது. தொடக்கநிலைப் பள்ளி களில் பயின்று வெளிவரும் குழந்தைகளிடம் மொழியறிவு நிலைத்து நிற்க வேண்டுமானுல் அவர்கள் முதல் ஐந்து வகுப்புக்கள் தொடர்ந்து படித்தல் வேண்டும். அந்த நிரந்தரப் படிப்பறிவை நோக்கமாகக் கொண்டே 1989-ஆம் ஆண்டில் அரசினர் வெளியிட்டுள்ள தாய்மொழிப் பாடத்திட்டம் அமைந்துள்ளது. அத்திட்டப்படி 58 ஆண்டு நிறைவுபெற்ற ஆண் பிள்ளைகளும் 5 ஆண்டு நிறைவுற்ற பெண் பிள்ளைகளும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப் பெறுவர்.

பள்ளியில் முதல் வகுப்பில் சேரும் பிள்ளைகளிடையே கொச்சை மொழி காணப்படும். அவர்கள் பேசும் மொழியில் சொல்லின் ஈற்ருெலியை இசையாது விடுதல், தெளிவின்றி இசைத்தல் முதலிய உச்சரிப்புக் குறைபாடுகளைக் காணக்