பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 தமிழ் பயிற்றும் முறை

களும் சுருக்கமாக இடம்பெறச்செல்தல் வேண்டும். உரை நடையில் கையாளப்பெறும் சில அருஞ் சொற்கள் இடம் நோக்கிப் பொருளுணரத்தக்கனவாயிருத்தல் வேண்டும். அப்படியிருந்தால் அப் பழக்கம் அவர்களே அகன்றபடிப். பின்பால் ஈடுபடத் துணைசெய்யும். ஒரு புதிய சொல்லே ஒரு பாடத்தில் பல்வேறு முறைகளில் கையாண்டால், மானுக்கர்கள் அதன் பொருளே எளிதிலறிந்து தாமும் அதைப் பல இடங்களில் பயன்படுத்தும் பயிற்சியினேப் பெறுவர், இத்தகைய சொற்களே ஒவ்வொரு பாடத்தின் ஈற்றிலும் தொகுத்துக் காட்டவேண்டும். அன்றியும், சில இலக்கண வழக்குகள், சந்திகள், வேறு இலக்கண முறைகள் ஆகியவற்றைக் கற்பிக்கும் ஒருசில மொழிப் பயிற்சிகளும், வாய்க்குட் படிப்பதற்கான பயிற்சிகளும், வீட்டு-வேலைப் பகுதி. களும் இப்பகுதியில் இடம்பெறுதல் இன்றியமையாதது.

சமயம் , ஒழுக்கம் முதலியவையற்றிய பகுதிகள் : சமயம் ஒழுக்கம் முதலியவைபற்றித் தேர்ந்தெடுக்கப்பெறும் பகுதி. கள் சமயப் பிணக்கை உண்டு பண்ணுமலும், பல சமயத்தினருக்கு உரியவையாயும் அல்லது ஒத்தனவாயும் இருந்தால் எல்லோரும் புத்தகங்களே விரும்பி ஏற்பர். திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்களின் கருத்துக்கள் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானவை. தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், திருவருட்பா, திருவிசைப்பா ஆகிய நூல்களும்; தாயுமானவர், பட்டினத்தடிகள், வீரமாமுனிவர், அரிகிருஷ்ணபிள்ளை, வெ. ப. சுப்பிரமணிய முதலியார், மஸ்தான் சாகிபு ஆகியோரின் பாடல்களும் இப்பகுதிக்கு உரியவை. தேம்பாவணி, சீருப்புராணம், சங்க இலக்கியங்கள் முதலியவையும் இப்பகுதிக்கு ஏற்றவை. வேதநாயகம் பிள்ளையவர்களின் சமரசக் கீர்த்தனைகளையும் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். மக்களில் எப்பகுதியினரையாவது புண்படுத்தும் கருத்துக்கள் நூல்களில் இடம்பெறலாகாது. எடுத்துக்காட்ட்ாக மதுவிலக்கைப்பற்றிய கொள்கைகள் எல்லோரும் ஒப்புக்கொள்ளத்தக்கவை. தேநீர், காஃபி முதலியன குடித்தல் கள்குடி போன்றது என்று கூறுவதைத் தவிர்த்தல் வேண்டும். மற்றும் திருநாவுக்கரசர், திருஞான