பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 : 6 தமிழ் பயிற்றும் முறை

நடையில் எழுதப்பெற்றுள்ள பகுதிகளேயும் படித்துக்காட்டி அந்த நூல்களின்பால் அவர்களின் கவனத்தை ஈர்க்கலாம். இதனுல் பலர் அந்த நூல்களைப் படித்துப் பயன்பெற வழியுண்டு.

நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், தனிப் பாடல்கள், கும்மி, சிந்து, தெம்மாங்கு, குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகங்கள், சிறப்புப் பெயர் அகராதிகள், பல்பொருட் களஞ்சியங்கள் முதலியவற்றில் மானுக்கர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டு அந்த நூல்களில் சுவையூட்ட லாம். இலக்கியம், திறனுய்வு நூல்கள், மொழி நூல்கள், மொழி வரலாற்று நூல்கள், இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றைப் படிக்க சில முற்போக்கான மாணுக்கர்களே ஏவிவிடலாம். சிறுவர்க்கான திங்கள், பிறை, வார வெளியீடுகள், சஞ்சிகைகள், விளக்க இதழ்கள் முதலியவை. களும், கண்ணிேயும் கருத்தையும் கவரும் வண்ணப் படங்களேக்கொண்ட இதழ்களும் வகுப்பு நூலகத்தில் வைக்கப் பெற்றிருந்தால், மாளுக்கர்களிடம் படிப்புணர்ச்சி இயல்பாக எழ இடம் உண்டு. அன்ருடச் செய்தித் தாள்களேயும் இங்கு இடம்பெறச் செய்து செய்திகளே அறிந்துகொள்ளும் வாய்ப்பினையும் நல்கலாம்.

ஒவ்வொரு வகுப்பு மாணுக்கனுடைய பெயர், அவன் எடுக்கும் நூலின் பெயர், எடுத்த தேதி, திருப்பிக் கொடுத்த தேதி முதலிய விவரங்களடங்கிய பதிவேடு ஒன்றை வைத்து அவ்வப்பொழுது பதிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மானுக்கனுக்கும் ஒவ்வொரு பக்கம் விட்டு எழுதினுல் அவன் அந்த ஆண்டில் என்னென்ன நூல்களைப் படித்தான், அவன் எத்தனே நூல்களைப் படித்தான் என்பன போன்ற செய்திகளை ஆசிரியர் அறிந்து கொள்ளலாம். மேற்கோள் நூல்களேத் தவிர, நூலக வகுப்பில் படித்து முடியாத நூல்களே வீட்டிற்கு எடுத்துச் செல்ல இசைவும் அளிக்கலாம்.

படிப்பகம் : இன்று தாய்மொழியில் ஏராளமான செய்தித்தாள்களும் பருவ வெளியீடுகளும் நாள்தோறும் வெளி வந்தவண்ண மிருக்கின்றன. இவற்றுள் நல்லன.