பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

824 தமிழ் பயிற்றும் முறை

வேண்டும். இத்தகைய விதிகள் அளவுகோலச் சீர்படுத்தி அளவீடுகளின் தரத்தையும் உயர்த்தும்.

3. தரப்படுத்திய சோதனைகள்

தரப்படுத்திய சோதனைகள் என்பது அடிப்படையில் தேறவேண்டிய பொருள் சார்புற்றே இருக்கும் ; அவற்றிற்குப் பொதுநிலை அளவைகள் (Norms) அறுதியிடப் பெற்றுள்ளன. அவைகள் போதுமான அளவு ஏராளமான பேர்களுக்குக் கொடுக்கப்பெற்று அவர்கள் பெறும் மதிப்பெண்களே க் கொண்டு பொதுநிலை அளவைகள் கண்டறியப் பெற்றுள்ளன. இந்தச் சோதனைகளே அதே வயது அல்லது அதே அறிவு நிலையுள்ள வர்களுக்குக் கொடுத்தால், அவர் களும் அதே மதிப்பெண்களைப் பெறுவர். இத்தகைய சோதனைகள் இத் துறையில் நன்கு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு சோதனை ஆயத்தம் செய்யும் அடிப்படையான விதிகளேத் தழுவி உருவாக்கப்பெற்றவை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக மேனுடுகளில் இந்தச் சோதனே இயக்கம் தோன்றி செயற்பட்டு வருகின்றது. முதலாம் உலகப் பெரும் போருக்குப் பிறகுதான் இந்த இயக்கம் நல்லமுறையில் வளர்ந்தது.

தரப்படுத்திய சோதனைகள் பல துறைகளைப் பற்றியவை. முதன் முதலாக அறிதிறன் சோதனைகளேத்தான் தரப்படுத்துவதில் அறிஞர்கள் கவனம் செலுத்தினர். இன்று அறிவுத்துறை, பள்ளித்துறை அல்லாத பிற துறைகளிலும் சோதனைகள் ஆயத்தம் செய்யப்பெற்றுத் தரப்படுத்தப் பெற். றுள்ளன. இவ்வாறு தரப்படுத்தப்பெற்ற சோதனைகள் கற்பித்தல் துறையில் அளத்தல் முறையில் சிறந்த முன்கேற்றத்தைக் கண்டுள்ளன; அளத்தலச் சரியான முறையிலும் நேரிய முறையிலும் கொண்டுசெலுத்தி யுள்ளன. அண் மையில் மேடுைகளில் பல்வேறு விதமான தரப்படுத்தப்பெற்ற சோதனைகள் அச்சிட்டு வெளியிடப்பெற்றுள்ளன; அவை கல்வித் துறையில் பல பிரிவுகளைப் பற்றியவை.