பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 தமிழ் பயிற்றும் முறை

சோதனைகளின் ஏற்புடைமை (Walidity) சில அடிப். படையான கொள்கைகளைப் பொறுத்துள்ளது. அறிதிறன் என்பது குடிவழி வந்த இயற்கைப் பண்பு ; சூழ்நிலேயாலும் பயிற்சியாலும் அதனே மாற்ற முடியாது. அது மன வாழ்வைப்பற்றிய பொதுப் பண்டேயன்றி திட்டமான பண். பன்று. அது தொடக்கத்தில் உடல் வயதிற்கேற்றவாறு வேகமாகவும் குமரப் பருவம் எய்திய பிறகு மிகவும் மெது. வாகவும் முதிற்சியடைந்து இருபதாவது ஆண்டில் அதன் வளர்ச்சி நின்று விடுகின்றது. அண்மையில் தார்ன்டைக் போன்ற அறிஞர்கள் செய்த ஆராய்ச்சிகளால் ஒருவரின் நடுப்பருவம் வரையிலும் அறிதிறன் வளர்ச்சி தடைப்பட வில்லை என்று கண்டறியப்பெற்றுள்ளது. முன்-குமரப் பருவத்தில் அறிதிறன் வளர்ச்சி மிகக் குறைவாக இருப்பு. தால் டெர்மன் திருத்தியமைத்த பிளேயின் சோதனைகளில் பன்னிரண்டு, பதினுன்கு வயதிற்கு விளுக்களும் வளர்ந்த வர்களுக்கு இரண்டு சோதனைகளும் காணப்படுகின்றன.

பினேயின் ஆய்வு 1908-இல் முதன் முதலாக ஃபிரெஞ்சு நாட்டில் வெளியிடப் பெற்றது. பிறகு பினேயும் சைமனும்சேர்ந்து 1908-லும், 19 1 1-லும் மீண்டும் திருத் தங்கள் செய்து வெளியிட்டனர். அமெரிக்காவில் இவ். வாய்வுகளைத் தழுவியும் திருத்தியும் 19 1-இல் காடார்ட் என்பாரும் 1912-இல் குஹல்மான் என்பாரும், 1918-இல் டெர்மென் என்பாரும், 1922-இல் ஹெர்ரிஸ் என்பாரும், 1987-இல் டெர்மென், மெர்ரில் என்பார்களும் வெளியிட் டுள்ளனர். இறுதியாகக் கூறப்பட்ட சோதனைகள்தாம் இன்று அமெரிக்காவில் பலரால் அறிந்தவையாகவும் நடைமுறையில் உள்ளவையாகவும் உள்ளன. பினே மூன்று முதல் பதின்மூன்று வயதுவரை ஃபிரெஞ்சு நாட்டுக் குழவிகளின் நடத்தையைக் கண்டறிய ஆயத்தம் செய்த சோதனைகளைப் போலவே, தமிழ்நாட்டுக் குழந்தைகட்கேற்ற சோதனைகளே நம் நாட்டு உளவியலார் ஆராய்ந்து ஆயத்தம் செய்ய வேண்டியது இன்றியமையாத தாகும்.