பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 தமிழ் பயிற்றும் முறை

செய்கைச் சோதனைகள் ; படையாளர்களைத் தேர்ந்தெடுப் பதற்கு இச்சோதனைகள் பெரிதும் பயன்படுத்தப்பெற்றன. போருக்குப் பிறகு ஒட்டிஸ், டெர்மென் போன்ற அறிஞர்கள் பள்ளிகளில் பயன்படக் கூடியவாறு அத்தகைய சோதனே. களே ஆயத்தம் செய்து 19 18-க்கும், 1925-க்கும் இடைப் பட்ட காலத்தில் வெளியிட்டனர். 1925-க்குப் பிறகு எத்தனையோ சோதனைகள் வெளிவந்துள்ளன.

Q&tions& G&#5&radir (Performance tests) : 1336's கண்ட சோதனைகள் படிக்கத் தெரிந்தவர்கட்கு மட்டிலுமே பயன்படக் கூடியவை. படியாதவர்களேயும் செவிடர்களாகவும் ஊமையர்களாக உள்ளவர்களேயும் எவ்வாறு ஆராய்வது ? அவர்களுடைய செயல்களேக் கொண்டு. தான் அவர்களுடைய அறிவு நிலையை ஆராயவேண்டும். இந்தச் செங்கைச் சோதனைகளில் சொற்களுக்குப் பதிலாக புலனிடான பொருள்கள் (Concrete things) அமைந்திருக்கும். அவர்களுக்குத் தரப்பெறும் பிரச்சினே புலரீைடான வையாக இருந்தாலும் அஃது ஆராய்ந்து முடிவு காண வல்லதாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, பலவடிவ. மான மரத்துண்டுகளே ஒரு மரத்துண்டினின்றும் வெட்டி எடுத்து இவர்களின் எதிரே வைத்து வெட்டி யெடுத்த அத்துண்டுகளே மீட்டும் அந்த மரத்துண்டில் எவ்வாறு பதியவைக்கின்றனர் என்பதனேக் கவனித்தால், பொருத்த முணரும் அறிவு எவ்வாறு அவர்களிடையே வளர்ந். துள்ளது என்பதை அறியலாம். ஒவ்வொரு துண்டினேயும் பொருத்துவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம், அவர்கள் தவறு செய்தல்களின் எண்ணிக்கை ஆகியவற்றை யெல். லாம் குறித்துவைத்து ஒப்பிட்டு நோக்கினுல் வயதிற்கேற்ப இவை மாறி வருவதனேக் காண்டல்கூடும். இத்தகைய பொது நில அளவுகோலைக்கொண்டு எல்லாக் குழந்தை. களன் அறிவு நிலையையும் அளக்கலாம்.

(ii) நாட்டச் சோதனைகள் : பள்ளி யாசிரியர்களுக்கு இத்தகைய சோதனைகளைக் கையாளும் வாய்ப்புக்களே இராதெனினும், அவர்கள் அச் சோதனைகளின் பொது