பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 647

தறிதல் வேண்டும். கீழ்க்காணும் பண்புகளே நல்ல சோதனை களின் இலக்கணமாகக் கொள்ள்லாம். சோதனைகளே ஆக்குவோரும் அவற்றைக் கையாளுவோரும் இவ்விலக்கனத்தை நன்கு அறிந்திருத்தல் இன்றியமையாதது.

67 fil460-500 (Validity): ஒரு நல்ல சோதனையில் அமையவேண்டிய சிறப்பியல்பு ஏற்புடைமை' என்பது. எதனே ஆராய வேண்டுமோ அதனைத் திறமையாக ஆராயும் தகுதியும் ஆற்றலும் வாய்ந்ததாக அந்தச்சோதனை விளங்கவேண்டும். ஒரு சோதனையால் மாளுக்கர்களின் எழுத்திலக்கண அறிவைப்பற்றி ஆராய விரும்பினுல், அந்தச் சோதனையின் வினுக்கள் தெளிவாக அமைதல் வேண்டும்; வினுக்களின் மொழி எளிதாகவும் தெளிவாகவும் இருத்தல் வேண்டும். விளுக்களில் மேற்கொண்டுள்ள சொற்களின் பொருளே விளங்காதிருந்தால், அதைச் சரியான சோதனை என்று சொல்ல முடியாது. தவிர, அது சொற்களஞ்சியத்தை ஆராயும் சோதனையாகவும் அமைதல் கூடும். ஏற்புடைமை ஆமையாத ஒரு சோதனையைக் கொண்டு மாணுக்கர்களின் ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறையை ஆய்தல் நியாயமற்ற செயலாகும். ஒரு சோதனை சரியான ஏற்புடைமையுடையதாக இருக்கவேண்டுமானல், அது கல்வித் திட்டத்துடன் நன்கு பொருந்தவேண்டும். உயர் நிலைப்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களன்றிப் பிறரால் ஆயத்தம் செய்யப்பெறும் சோதனைகள் சரியான முறையிலிருப்பதில்லை. உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களுக்குரிய கல்வித் திட்டமே சரியான முறையில் தரப்படுத்தப் பெறவில்லை. அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பாடநூலைக் கொண்டு பாடம் கற்பிக்கப்பெறுதல் வேண்டும் என்று வரையறை, செய்தாலும், கற்பிக்கும் ஆசிரியர்களுக் கேற்றவாறு அது மாறுபடுகின்றது. எனவே, கற்பித்தலுக் கேற்றவாறு சோதஆனயும் அமைதல்வேண்டும் என்பது பெறப்படுகின்றது. இதைத் தவிர, இன்ைெரு பிரச்சினையும் எழ இடம் உண்டு. பாடத்திட்டத்தின் நோக்கத்தைப் பொறுத்தும், அறிவு நிலையில் ஒரு குறிப்பிட்ட கூறினைச் சோதிப்பதைப்பொறுத்தும் சோதனை மாறுபடும். பாடத்திட்டத்தின்