பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் ՅՅ 1:

நியாயமானதாக இருக்க இடம் உண்டு. எனவே, சோதனை சரியானதாக இருக்கவேண்டுமானல் தேறப்படும் பகுதி பரந்திருக்கவேண்டும் என்பது பெறப்படுகின்றது. ஆகவே, சோதனையின் நம்பகத்திற்கு இயலுமை இன்றியமையாத தாகின்றது. இயலுமையை நம்பகத்தினே ஒரு கூருகவும் கொள்ளலாம்.

4. புறவயம் (Objectivity) ஒரு சோதனை சிறந்ததென விளங்கவேண்டுமானல் அதைப் பலர் கையாளும் பொழுதும் ஒரேவித முடிவைப் பெறுவதாக அமைதல் வேண்டும். கையாளுவோரின் மனப்பான்மைக்கேற்றவாறு மாளுக்கர்கள் பெறும் மதிப்பெண்கள் மாறக்கூடாது. சோதனையைக் கையாளுவோரின் கருத்து, மனநிலை, ஒரு தலைச்சார்பு முதலியவற்றிற் கேற்றவாறு மாரு நிலையுள்ள சோதனையைப் புறவயமுடையதாகக் கொள்ளலாம். புது முறை விளுக்கள் யாவும் ஓரளவு இத்தன்டிையுடையனவாக வுள்ளன என்று கொள்ளலாம். இவ்வாறு புறப் பொருளே வேறுபிரித்துத் தன்ளுேக்கிலும் வேருகச் சோதனைகள் அமைதல்வேண்டும் என்ற எண்ணமே தரமாக்கிய சோதனை #&m 3 (Standardised tests) G35TÉpològigs. $253rmy அல்லது இரண்டு திட்டமான விடைகள் வருமாறு விளுக்களே அமைத்து அவற்றின் விடைகளையும் வரையறை செய்துவிட்டால், சோதனைகள் புறவயமுடையனவாக இலங்கும்.

5. கையாளுவதில் எளிமை : சோதனைகள் எளிதாக வழங்கக்கூடியனவாகவும், எளிதாகத் திரும்ப வாங்கக் கூடியனவாகவும், எளிதாகத் திருத்தக் கூடியனவாகவும் இருத்தல்வேண்டும். ஒரு நல்ல சோதனே இம் முப்பண்புகளையும் பெற்றிருக்கும். கற்பித்தலில் சொல்லிக்கொடுத்தல் முக்கியமேயன்றி தேர்வு நடத்துதல் அன்று. ஆசிரியர் தேர்வுக்கு முதலிடந்தத்து கல்வியின் நோக்கித்தையே சிதைத்துவிடல் கூடாது. தேர்வுகளைப்பற்றிய குறிப்புக்கள் எளிதாகவும் தெளிவாகவும் நேராகவும் அமைந்து அவற்றை ஆயத்தம் செய்வதும் எளிதாக அமைந்தால் மிக நன்று. தரமாக்கிய சோதனைகளில் இப்