பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்திட்டமும் மொழிப்பாடத்திட்டமும் 45.

இத்தகைய பள்ளிகள் உள்ளன. எல்லா இடங்களிலும் இருப்பவை மேற்கூறிய மூவகைப் பள்ளிகளே. குழந்தைகளின் வளர்ச்சிப் படிகளையொட்டி இவ்வகைப் பள்ளிகள் அமைந்திருப்பதாகக் கருதலாம். நம்நாட்டில் குழந்தையின் கல்வி சாதாரணமாக ஐந்தாவது வயதில் தொடங்குகின்றது. 10 வயது முடிய குழந்தைகள் தொடக்க நிலைப் பள்ளிகளிலும், 18 வயது முடிய நடுநிலைப் பள்ளிகளிலும், 16 வயது முடிய உயர்நிலைப் பள்ளிகளிலும் கற்று வருகின்றனர்.

சாதாரணமாகக் குழந்தைகள் நன்ருக நடக்கவும் பேசவும் கற்றுக்கொள்கின்றனர்; ஐந்து வயதிற்குள் சூழ்நிலையைக் கவனிக்கவும், அதைப்பற்றிப் பேசவும் அறிந்து கொள்ளுகின்றனர். குழந்தைகளுக்கு ஐந்தரை வயது. நிரம்பியதும், அவர்கள் பள்ளியில் சேர அரசினர் விதியும் இடந்தருகின்றது ; குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப் பெறுகின்றனர். தொடக்க நிலைப் பள்ளிக்குரிய கல்வித் திட்டம் எவ்வாறிருக்க வேண்டுமென்பதைக் குழந்தை இயல்புகளைக் கூர்ந்து பார்த்த பின்பே அறுதியிடல் வேண்டும்.

குழந்தை முதன் முதலாக இவ்வுலக வாழ்வைத். தொடங்கும்பொழுது தம் பொறிகள் வாயிலாகத்தான் இவ் வுலகத் தொடர்பு பெறுகின்றது ; பொறிகள் வாயிலாகப்பெறும் உலக அறிவுதான் பிறிகால வாழ்விற்குச் சிறந்ததோர் அடிப்படையாக அமைகின்றது. புலனுணர்ச்சிகளுக்கேற்றவாறு (Sensations) குழந்தையின் மனமும் செயற். படுகின்றது. இவ்வாறு புலனுணர்ச்சிகளால் மனம் செயற். படுந் தன்மை முதன் முதலாகக் குழந்தைக்கு அண்மையி, லுள்ள சூழ்நிலையை யொட்டி அமைகின்றது. நாளடைவில் குழந்தைகள் பேசக் கற்றுக்கொண்ட பிறகு இப்பண்பு. சேய்மையிலுள்ள சூழ்நிலையையும் ஒட்டி அமைந்து விடுகின்றது. இந்த உண்மையின் அடிப்படையில்தான் தொடக்க நிலைப் பள்ளிக்குரிய கல்வித்திட்டம் உருவாக வேண்டும். எனவே குழந்தைகள் நேரில் அறியக்கூடிய