பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பயிற்றலின் அடிப்படை விதிகள்

கில்வித் திட்டத்தையும் மொழிப்பாடத் திட்டங்களையும் அறிந்த ஆசிரியர்கள் பயிற்றலில் மேற்கொள்ள வேண்டிய விதிகளேயும் அறிந்திருத்தல் வேண்டும். அஃத்துடன் பயிற்றலில் ஆசிரியரின் நிலை என்ன என்பதையும் அவர்கள் அறிதல் இன்றியமையாதது. பயிற்றல் என்பது என்ன ? ஆசிரியர் மாணுக்கர்களைச் சூழ்நிலைக்கு இயையத் தரும் பயிற்சியே பயிற்றல் ஆகும் என்று கல்வி நிபுணர்கள் கூறுகின்றனர் : சடவுலகத்துடனும் சமூக உலகத்துடனும் இணைந்து வாழச் செய்யும் வழிகளே அமைத்தல்தான் பயிற்றல் என்பது அவர்கள் கருத்தாகும். பயிலும் குழந்தையையும் பயிலவேண்டிய உலகையும் ஒன்று சேர்த்தலே ஆசிரியரின் பணியாகும். பரந்தாமனையும் மொழிப் பாடத்தையும் இணைப்பதுதான் ஆசிரியரின் பொறுப்பாகும். இவ்வாறு இணைத்தலில் வெற்றி காண்பதே ஆசிரியரின் தனிச் சிறப்பாகும். ஒரு சில கூறுகளில் பயிற்றல் தீ மூட்டுதலே ஒத்திருக்கின்றது. தீ மூட்டுதலில் எரி பொருளுடன் சூட்டைச் சேர்த்து வளி மண்டத்திலிருக் கும் உயிரியத்துடன் (Oxygen) இணையும்படி செய்கின்ருேம். வகுப்பில் ஆசிரியர் இதைத்தான் செய்கின்ருர். அவர் பல்வேறு விதமான பயிற்றும் துணைக்கருவிகளைக் கையாண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் சூழ்நிலைக்கும் நடுவில் ஒருவித திடீர் ஒளியை (Flash) உண்டாக்குன்கிருர். இதில் மாணுக்கர் ஆசிரியருடன் இசைந்து போவதில்லை. அவர்கள் வெளியுலகையொட்டி இசைந்து செல்கின்றனர். சிறிது சிறிதாக அவர்கள் வெளியுலகைப் பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்ளுகின்றனர். இக்கருத்தை ஆடம்ஸன் என்ற அறிஞர் நன்கு